4 மணி நேரம் போராடி உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்…!! வீடியோ

Read Time:2 Minute, 16 Second

625-0-560-350-160-300-053-800-668-160-902சிரியாவில் வான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளனர்.

சிரியாவின் அலெப்போ நகரில் ரஷ்ய கூட்டுப்படைகளின் வான் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் அலெப்போ பகுதியில் வான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவனை syrian civil defence எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று 4 மணி நேரம் கடுமையாக போராடி உயிருடன் மீட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் சிறுவனின் தாயார் உள்ளிட்ட 20 பேர் வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தன்னார்வலர்கள் முதலில் சிறுவனை மீட்பதற்காக குறித்த பகுதியில் இருந்த கட்டிட இடிபாடுகளை மொத்தமும் அங்கிருந்து நீக்கியுள்ளனர்.

பின்னர் சிறுவனுக்கு எவ்வித ஆபத்தும் நேராத வகையில் செயல்பட்டு பத்திரமாக சிறுவனை மீட்டுள்ளனர்.

சிரியா மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகளின் தொடர் வான் தாக்குதலால் கடந்த ஒரு வாரம் மட்டும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் ரத்த வங்கி ஒன்றும் சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றும் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் இதேபோம்று 126 தாக்குதல் நடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயத்தை கிழிக்கும் சம்பவம்! மனிதாபிமானம் உள்ளவர்களுக்கு மட்டும்…!!
Next post மக்களே அவதானம்! இடி,மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்…!!