குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வைத்தியம் இதோ…!!

Read Time:3 Minute, 41 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7பொதுவாக நான்கு முதல் எட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமாக வயிற்று வலிப் பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள்.

குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

அதில் முக்கியமாக புட்பாய்சன், மலச்சிக்கல், வயிற்றில் நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சனைகள் காரணமாகவும் குழந்தைகளுக்கு வயிற்றுவலிகள் ஏற்படுகிறது.

எனவே குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால், நம்மில் பலபேர்கள், நமது வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் எடுத்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

ஏனெனில் நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும்.

இஞ்சி

இஞ்சியில், ஆன்டி-ஆக்ஸிடன்டுக்கள், அழற்சி எதிர்ப்பு பொருள், ஜின்ஜெரால் போன்ற சக்தி வாய்ந்த சத்துக்கள் அதிகமாக உள்ளது.

எனவே இது செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் அமிலத்தை சரிசெய்யும் தன்மைக் கொண்டது.

இதனால் இந்த இஞ்சியைக் கொண்டு டீ செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சுடுநீர்

சுடுநீர் ஒத்தடம் கொடுத்தால், நமது சருமத்தில் உள்ள ரத்தோட்டமானது அதிகரிக்கும்.

எனவே குழந்தைகள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்த்தைப்படும்போது, சுடுநீர் ஒத்தடம் கொடுத்தால், சருமத்தின் ரத்த ஓட்டம் அதிகரித்து, வலி குறையும்.

சீமைசாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீயில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே குழந்தைகள் வயிற்று வலியால் அவஸ்தைப்படும் போது, சீமைச்சாமந்தி டீ தயாரித்துக் கொடுத்தால், இது குழந்தையின் செரிமான பாதை தசைகளை தளர்வடையச் செய்து, வயிற்று வலியைக் குறைக்கிறது.

தயிர்

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவி செய்கிறது.

எனவே நமது அன்றாட உணவில் தயிரை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், கடுமையான வயிற்றுவலி ஏற்படுவதை தடுக்கிறது.

புதினா டீ

ஆய்வின்படி, புதினா வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது.

எனவே வயிற்று வலியின் போது புதினா டீயை செய்துக் குடித்தால், நமது அடிவயிற்று தசைகளை தளர்வடையச் செய்து, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணத்தை தருகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித வெடிகுண்டாய் 7 வயது சிறுமி! ஒரு நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!
Next post சாலமன் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!