குழந்தைகள் தினம்? இதோ வல்லுனர்கள் கூறும் முத்தான அறிவுரைகள்…!!
உங்கள் குழந்தைகள் உங்களின் உலகமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உலகத்தை அழகாக அமைத்துக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்களின் பெரிய கடமையாகும்.
சவால்கள் நிறைந்த இந்த சமூகத்தில் அத்தனை சிக்கல்களையும் எப்படிசமாளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இது அவசியமான ஒன்று.
பிரபல இணையதளம் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அளித்துள்ளனர். அவற்றைப் பார்க்கலாம்.
குழந்தைகளை வேலை வாங்க வேண்டும்
வீட்டில் குப்பைகளை அகற்றுதல், புல்வெளிகளை சுத்தம் செய்தல், உணவுகளை சமைத்தல் என உங்களது குழந்தைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். வாழ்க்கை எளிமையானது அல்ல என்பதை இது குழந்தைகளுக்கு புரிய வைக்கும். இது உங்கள் குழந்தைகளை வாழ்க்கையின் அடுத்த படிகளுக்கு எடுத்துச் செல்லும்.
வேலை என்பது வாழ்க்கையின் முக்கியமான பகுதி என்பதை அவர்களுக்கு உணர்த்தும் பாடமாக இது அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலை வாங்குதல் கண்டிப்பாக சர்வாதிகாரத்தனமாகவோ அல்லது அனுமதியளிக்கும் வகையிலோ இருக்க கூடாது.
சமூக திறன்களை கற்றுக்கொடுங்கள்
நீங்கள் சகித்துக் கொள்ள முடியாத சில மனிதர்களுடன் வேலை பார்த்திருந்தால், 20 வருடம் படித்ததை விட அதிகம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இதனால் கண்டிப்பாக சமூகதிறன்கள் உங்களது குழந்தைகளுக்கும் அவசியமானது.
இது போன்ற திறன்கள் உங்களுடைய குழந்தைகள் அவர்களின் சகாக்களுடன் ஒத்துப்போக, அவர்களை புரிந்து கொள்ள, அவர்களுக்கு உதவ பெரிதும் பயன்படும். தவிர, தங்களுடைய பிரச்சனைகளுக்கும் அவர்கள் எளிதில் தீர்வு காண உதவும்.
நல்லதையும் நல்ல கல்வியையும் கற்றுக் கொடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு முதலில் நீங்க சிறந்த ரோல் மொடலாக இருங்கள். அவர்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். அவர்கள் வாழ்க்கையில் சிறந்த ஒரு பாதை அமைய அதுவே சிறந்த ஒரு வழியாக இருக்கும்.
நல்ல உறவுகளை வளர்க்க கற்றுக் கொடுங்கள்
நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம், திருமணம் முறிந்துவிட்டாலும் குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்கள் சேர்ந்து இருப்பார்கள். இது போற்றத்தக்கது. நல்ல பெற்றோர், உடன்பிறப்புகள் போன்ற உறவுகள் குழந்தைகளுக்கு நல்ல வழியை அமைத்து கொடுக்கும்.
ஆனால் பல குழந்தைகள் இது போன்ற நல்ல உறவுகள் அமையாமல் சிரமப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற நல்ல உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரரர்களாக இருப்பதையும் வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கணித ஆர்வத்தை தூண்டுங்கள்
குழந்தைகளிடம் இருக்கும் கணித ஆர்வம், அவர்களை வாழ்க்கையில் பலவற்றை சாதிக்க தூண்டும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். கணிதம் உங்கள் குழந்தைகளின் மனதையும், மூளையும் சுறுசுறுப்பாக வைக்கும். அதனால் சிறுவயதிலே உங்கள் குழந்தைகளுக்கு கணித ஆர்வத்தை ஊட்டி வளருங்கள்.
முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள்
வெற்றியை நோக்கி முன்னேறும் போது முயற்சி செய்ய உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். அதே சமயம் தோல்வி வரும் போது அதை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வழிகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இந்த பாடம் வாழ்க்கையில் பல சாதனைகளை அவர்கள் எட்டிப் பிடிக்க உறுதுணையாக இருக்கும்.
சாதிக்க கற்றுக் கொடுங்கள்
உங்கள் குழந்தைகள் விரும்பும் வழிகளில் அனுமதித்து அவர்களுக்கு சாதிக்க சொல்லிக் கொடுங்கள். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது அதில் இருந்து மீண்டு வரும் வழிகளையும் கற்றுக் கொடுங்கள்.
இத்தகைய தொழில் நெறிமுறைகள் அவர்கள் வாழ்க்கையில் பல விடயங்களை சாதிக்க அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதை எல்லாம் வல்லுனர்களே தீர்க்க ஆராய்ந்து கூறியுள்ளனர்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating