ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: 6.2 ரிக்டரில் பதிவு..!!

Read Time:1 Minute, 18 Second

201611121204264555_japan-6-2-earthquake-hits-eastern-coast_secvpfஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்ஷு தீவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.42 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின.

எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. ஹோன்ஷு தீவு பகுதியில் பூமிக்கு அடியில் 44 கி.மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த ஏப்ரலில் குமமாட்டோ பகுதியில் 2 கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 1700 நில அதிர்வுகளும் ஏற்பட்டது. 50 பேர் உயிரிழந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளையாக மாற வேண்டுமா?
Next post அமெரிக்க அரசியலில் ஹிலாரியின் மகள் செல்சியா…!!