ஆணுறையால் வரும் ஒவ்வாமையை வெளிக்காட்டும் அறிகுறிகள்…!!
காண்டம் பயன்படுத்துவதால் 95% கருத்தரிப்பதைத் தவிர்ப்பதோடு, 90% பாலியல் நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம் என சொல்லப்படுகிறது.
காண்டம் என்னும் கருத்தடைப் பொருளானது லாடெக்ஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, ஸ்பெர்மிசைடு என்னும் பொருளால் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும்.
பல பேர் காண்டம் பயன்படுத்தி, அதனால் கடுமையான அலர்ஜிக்குள்ளாகி அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு காண்டமில் உள்ள லாடெக்ஸ் மற்றும் ஸ்பெர்மிசைடு என்னும் பொருளும் தான் காரணம்.
அந்தரங்க உறுப்பில் அரிப்பு:
காண்டம் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால், முதலில் அந்தரங்க உறுப்பில் மிதமானது முதல் கடுமையானது வரையான அரிப்புடன் கூடிய எரிச்சலை உணரக்கூடும்.
பிறப்புறுப்பு கொப்புளங்கள்:
பிறப்புறுப்புகளில் கொப்புளங்களானது லாடெக்ஸ் அல்லது ஸ்பெர்மிசைடு மூலம் ஏற்படக்கூடும். மேலும் இவ்விடத்தில் கொப்புளங்கள் வந்தால், பிறப்புறுப்பு பாதையில் வீக்கத்துடன், சிராய்ப்புகளும் இருக்கும்.
கண்களில் நீர் வடிதல்:
காண்டமில் உள்ள லாடெக்ஸ் மூலம் அலர்ஜி ஏற்பட்டிருந்தால், இரத்தத்தின் மூலம் பார்வை நரம்புகளை அடைந்து, கண்களில் இருந்து நீர் வடியவோ அல்லது கண்களில் எரிச்சல்களையோ ஏற்படுத்தும்.
சரும அரிப்பு:
காண்டம் மூலம் ஏற்படும் அலர்ஜியானது, அந்தரங்க உறுப்பில் மட்டுமின்றி, உடலின் மற்ற பகுதிகளிலும் அரிப்புக்களுடன் படையையும் ஏற்படுத்தும்.
குறைந்த இரத்த அழுத்தம்:
காண்டம் மூலம் அலர்ஜி ஏற்படுமாயின் சில நேரங்களில், அதன் காரணமாக இரத்த அழுத்தம் குறையும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
குமட்டல்:
லாடெக்ஸ் அல்லது ஸ்பெர்மிசைடு மூலம் ஏற்படும் அலர்ஜியினால், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை கூட ஏற்படும். எனவே எப்போதும் குமட்டல் மற்றும் தலைச்சுற்றலை சாதாரணமாக நினைக்காதீர்கள்.
மார்பு இறுக்கம்:
காண்டம் மூலம் அலர்ஜியானது தீவிரமாக இருந்தால், அதனால் மார்பகங்களில் ஒருவித இறுக்கத்தை ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating