வேகமாக உடல் எடையைக் குறைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்..!!

Read Time:4 Minute, 40 Second

weightlossஉடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதில்லை. நம் உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானங்களைப் பருகி, உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

குறிப்பாக சில பானங்களை காலை வேளையில் பருகி வந்தால், மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்படும். இங்கு உடல் எடையைக் குறைக்க காலை வேளையில் குடிக்க வேண்டிய பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாழைப்பழ ஷேக் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது ஐஸ் கட்டிகள் மற்றும் 1ஃ2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துப் பருக வேண்டும். இதனால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கும். மேலும் இந்த பானத்தில் பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.

இந்த பானத்தில் பால் சேர்க்கப்படாததால், இது உடல் எடையைக் குறைக்க மிகவும் நல்லது. இளநீர் புதினா ஜூஸ் இளநீர் புதினா ஜூஸ் இளநீரில் 2 துண்டுகள் அன்னாசிப் பழம் மற்றும் சிறிது புதினா இலைகளை சேர்த்து நன்கு அரைத்து, அதனைப் பருக வேண்டும். இதனால் இந்த பானத்தில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் புரோமிலைன் போன்றவை உடல் எடையைக் குறைக்க உதவும்.

வெள்ளரிக்காய் கொத்தமல்லி ஸ்மூத்தி வெள்ளரிக்காய் கொத்தமல்லி ஸ்மூத்தி ஒரு சிறிய வெள்ளரிக்காய், 1 சிறிய கட்டு கொத்தமல்லி, சிறிது இஞ்சி, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மீண்டும் நன்கு அரைத்து, பாதி எலுமிச்சையைப் பிழிந்து, காலையில் பருகினால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைவதை நன்கு காணலாம். கிவி, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் கிவி, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் சிறிது கிவி, வெள்ளரிக்காய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களின் துண்டுகளை 1 சொம்பு நீரில் போட்டு, 10 -15 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருக வேண்டும்.

இதனால் அந்த பானத்தில் பழங்களில் உள்ள வைட்டமின்களான சி மற்றும் ஏ போன்றவை உடலுக்கு கிடைத்து, உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடல் எடை குறையும். எலுமிச்சை மஞ்சள் டீ எலுமிச்சை மஞ்சள் டீ ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரில், 1ஃ2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சிறிது டீ இலைகள், 1 சிட்டிகை பட்டைப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, வடிகட்டி சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.

க்ரீன் காபி மற்றும் தேங்காய் எண்ணெய் க்ரீன் காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு கப் சுடுநீரில் 1 க்ரீன் காபி பேக்கை வைத்து 10 நிமிடம் கழித்து அதை நீக்கிவிட்டு, 1ஃ2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பருக வேண்டும். இந்த பானத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்த நாளில் ‘பிகினி’ வீடியோவை வெளியிட்ட இலியானா..!!
Next post இதையெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்காதீங்க..!!