மென்மையான கை கால்களின் அழகிற்கு..!!
சந்தனத் தூள், அரிசிமா, சோயாமா, கஸ்தூரி மஞ்சள் பூவிலிருந்து எடுக்கப்படும் பொடி இவை ஒவ்வொன்றிலும் 2 டிஸ்பூன் எடுத்துக் கொண்டு பன்னீர் அல்லது தாழம்பூ நீருடன் கலந்து கைகளுக்குப் போட்டால் சொரசொரப்பூ போய் பளபளப்பூ வரும்.
கால்களும் பாதங்களும்
கால்களையும் பாதங்களையும் அக்கறையுடன் கவனிக்கவில்லையெனில் பித்த வெடிப்பூ, கால்வலி, கால் ஆணி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாதங்களில் இறந்த செல்கள் அதிகமாக சேர்வதாலேயே இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கால்கள் சுத்தமாக வாரம் இருமுறை ஒரு வாளி வெதுவெதுப்பான் நீரில் ஒரு டிஸ்பூன் டெட்டோல் கலந்து அதில் 10 நிமிடங்கள் ஊற வைத்தால் சுத்தமாகும். முழங்காலில் கறுப்பாக இருந்தால் எலுமிச்சம் பழத்தோலை எடுத்து தேய்த்து சிறிதுநேரம் கழித்து கழுவினால் சொர சொரப்பூ போகும்.
பித்த வெடிப்பிற்கு
வஸ்லின் அல்லது பெட்ரோலியம் ஜெலியைத் தூங்குவதற்கு முன் பாதங்களில் தடவலாம். எழுமிச்சம் பழத்தோல்- 2 டிஸ்பூன் தேங்காய் எண்ணெய்- 10.மி.லி இவை கலந்து பேஸ்டாக்கி பித்தவெடிப்பூள்ள இடங்களில் தடவினால் வெடிப்பூகள் நீங்கி விடும்.
கால்களை தண்ணீரில் நனைத்து விட்டு பியுமிக் கல்லால் தேய்கலாம். அல்லது பாதப் பராமரிப்பூக்கென்றே உள்ள ஃபூட் ஃபைலால் பாதங்களைத் தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
ஒரேஞ் பழத்தோலை கால்களின் அடிப்பாகத்தில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பிறகு கழுவினால் பித்த வெடிப்பூ போகும். ஒரு அகலமான பாத்திரத்தில் 2டேபிள் ஸ்பூன் உப்பூ சேர்த்து பத்து நிமிடங்கள் கால்களை ஊற வைத்தால் கால் உளைவு போய்விடும்.
கால் ஆணிக்கு
ஒரு டிஸ்பூன் எருக்க இலை சாற்றுடன் 5 சொட்டு டீ ட்ரீ ஒயில் சாற்றுடன் 5 சொட்டு டீ ட்ரீ ஒயில் கலந்து ஆணி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கால்ஆணி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கால் வெடிப்பூ நீங்க எண்ணெய்
கிளிசரின் -50 மில்லி லீற்றர், கடுகு எண்ணெய்-10 மில்லி லீற்றர், எழுமிச்சை பழச்சாறு- 20 சொட்டுக்கள். இவை சேர்த்துக் கலக்கவும். இதை இரு கால்களிலும் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி விடலாம். இதை ஒரு கிழமைக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றிருக்க
ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து உங்கள் பாதங்களை அதில் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிக்காலை தேய்க்க வேண்டும.
ஒரேஞ் ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர் கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு கோல்ட் கிரீம் அல்லது மொய்சரைசர் போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாக பளிச்சென்றிருக்கும்.
குதிக்கால் வெடிப்பூக்கள் இருந்தால் தினமும் விளக்கெண்ணெய் தடவி வர குதிக்கால்களில் இருக்கும் வறண்ட தன்மை நீஞ்கி வெடிப்பூகளும் மறையும்.விளக்கெண்ணெயைப் பயன்படுத்திமசாஜ் செய்து வந்தால் கைகளில் மற்றும் கால்களில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்துவிடும். மேலும் தினமும் இரவில்படுக்கும் முன்நகங்களில் விளக்கெண்ணையை வைத்து வந்தால் நகங்கள் நன்றாக பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
Average Rating