அழகாக ஆசைப்படுபவர்களா நீங்கள்? அப்படியென்றால் இதை கட்டாயம் படியுங்கள்..! பகிருங்கள்..!!

Read Time:9 Minute, 56 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-6வீட்டில் நாம் அன்றாடம் பல செயற்கை திரவியங்களை பயன்படுத்துகிறோம். நம் வீட்டில் இரசாயனங்களால் ஆக்கப்பட்ட எத்தனை பொருட்கள் இருக்கின்றன என நீங்களே பட்டியலிட்டு பாருங்கள்.

குறிப்பாக அழகு சாதனப்பொருட்கள், குளியலறையில் பயன்படுத்தும் பொருட்கள் (ஷாம்பு, துவைத்த துணியை மணமாக்க கம்போர்ட், நெப்தலின் உருண்டைகள்……) மற்றும் அறைகளை நறுமணம் மிக்கதாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் வாசனைத்தெளிப்பான் (room spray) போன்றவை ஒரு நாள் இல்லாவிடில் என்ன செய்வீர்கள்? அன்றைய நாள் முழுதும் வேலைகள் செய்வது அசௌகரியமாக இருக்கும்.

ஆனால் இந்த பொருட்கள் அன்றாட வேலைகளை இலகுவாக்கினாலும் கூட எவ்வளவு பெரிய பிரச்சினைகளை எதிர்காலத்தில் உண்டாக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.

மாறாக இவை இல்லாவிடில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடியாது, நம்மை அழகுபடுத்திக்கொள்ள முடியாது என அடுக்கடுக்காக சான்றிதழ் வழங்குவீர்கள்.

முதலில் அழகு சாதன பொருட்கள் பற்றிபார்ப்போம்…..

கண்களை அழகுபடுத்தும் பொருட்கள் : கண்கள் என்பது எமது மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆனால் கண்ணிற்கு நாம் பயன்படுத்தும் பல்வேறு அழகு பொருட்களால் கண்ணில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கண்ணிற்கு பயன்படுத்தும் ஐஷடே பாரிய உடல்நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதில் உடலுக்கு ஒவ்வாத 26 விதமான இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் மிகவும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக பாலிதீன் டெரிப்தாலேட் எனப்படுகின்ற இரசாயனம் கருதப்படுகிறது.

இந்த இரசாயனப்பொருட்கள் புற்று நோய் மற்றும் உடலின் உட்பாகங்களில் கடுமையான பாதிப்பு என்பவற்றை தோற்றுவிப்பதாகவும் மருத்துவ ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

கன்னங்களை மெருகூட்டும் பொருட்கள் : கன்னங்களின் அழகை மேம்படுத்த பயன்படுத்தும் ரூஜ் 16 வகையான இரசாயனப்பொருட்களை கொண்டிருக்கிறது. இவற்றுள் எதில் பாதபின் மற்றும் மெதில் பாரபின் ஆகிய இரசாயனப்பொருட்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.

கன்னம் சிவந்து போதல் மற்றும் கன்னத்தில் எரிச்சல் போன்றவற்றை தோற்றுவிக்கக்கூடியவை.

முகஅழகுப் பொருட்கள் : முகத்தின் அழகினை மேம்படுத்த பயன்படுத்தப்படும் லோஷன்களில் 24 விதமான இரசாயனப்பொருட்கள் உள்ளடக்கப்படுகின்றன.

அதிலும் பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரசாயனப்பொருட்களினால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள் மற்றும் புற்று நோய் என்பவை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.

உதட்டுச்சாயம் : இதில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 வகையான விரும்பத்தகாத இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரசாயனங்கள் நாளடைவில் புற்று நோயை தோற்றுவிக்கக்கூடியவை.

செயற்கையாக இரசாயன பொருட்களால் ஆக்கப்பட்ட அழகுசாதன பொருட்களைபயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலம் பக்கவிளைவுகளையும் ஆபத்துக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

இயற்கையாக அழகை மேம்படுத்தக்கூடிய இலகுவாக கிடைக்கக் கூடிய இயற்கைப்பொருட்கள்.

கடலைமா, தயிர், மஞ்சள், எலுமிச்சைச்சாறு, கற்றாளை மற்றும் சந்தனம்.

ஷாம்பு : தற்காலப்பெண்கள் குளிக்க வேண்டும் என்றால் உடனடியாக நாடுவது ஷாம்புவைத்தான். ஆனால் இந்த ஷாம்புவில் பல்வேறு இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நுரைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் 15 வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றிலும் உச்ச பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் மற்றும் பாரோபிளின் கிளைசால் என்பவை அறியப்பட்டுள்ளது.

இந்த இரசாயனப்பொருட்கள் கண் எரிச்சல் மற்றும் பார்வைக்கோளாறு என்பவற்றை ஏற்படுத்தும்.

இவற்றை தவிர்த்து மருதாணி இலை மற்றும் சீயக்காய் போன்றவற்றைபயன்படுத்த முடியும்.

வாசனைத்திரவியங்கள் : பொதுவாக வாசனைத் திரவியங்களில் 15 விதமான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன அத்தோடு 32 வகையான இரசாயனப்பொருட்கள் உடலுக்கு பயன்படுத்தும் லோஷன்களில் காணப்படுகின்றன.

இவை தோல், நுரையீரல் மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றை விட தலைவலி, மயக்கம், தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம் போன்ற விளைவுகளை உருவாக்கக் கூடியவை.

இதற்கு பதிலாக பன்னீரை பயன்படுத்த முடியும்.

நகப்பூச்சுகள் : நகங்களை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தும் நகப்பூச்சிகளில் உள்ள இரசாயனங்கள் குழந்தையின்மையை தோற்றுவிக்கக்கூடியவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இவ்வாறான நோய்களை தவிர்த்துக்கொள்ள இரசாயனக் கலப்பில்லாத மூலிகை அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதே சிறப்பானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளியலறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள்

நாப்தலின் உருண்டைகள் : குளியலறைக்கு வரும் பூச்சிகளை விரட்ட நாப்தலின் உருண்டைகள் உள்ளிட்ட பல இரசாயன திரவங்களை பயன்படுத்துகிறோம்.

இவ்வாறான இரசாயனக் கலவைகள் மூலம் பல்வேறு நோய்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. விசேடமாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதகமான விளைவுகளை தோற்றுவிக்கின்றன.

குளியலறைக்கு பூச்சிகள் வருவதை தடுக்க வேப்பிலை விழுதுகளை பயன்படுத்தலாம்.

அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை கொண்ட வீட்டு பாவனை பொருட்கள் தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்கள் தொடக்கம் நுளம்புகளை விரட்ட பயன்படும் நுளம்புச்சுருள் வரை அனைத்திலும் இரசாயனப்பொருட்களின் ஆதிக்கம் காணப்படுகிறது.

நாம் வாங்கும் காய்கறிகளில் கூட இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன. உண்ணும் உணவு தொடக்கம் உடை வரை அனைத்தையுமே இரசாயனங்கள் வியாபித்துள்ளன.

இவற்றை தவிர்த்து இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நோயற்ற சுகாதாரமான வாழ்வைப்பெற முடியும்.

சில இரசாயனப்பொருட்கள்உடனடியான மாற்றத்தை எம்மில் காட்டாவிட்டாலும் எதிர்காலத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இதனை தவிர்க்க நம்முன்னோர்களின் வழியை பின்பற்றுதலே சிறந்த தீர்வு. பல்வேறுஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துதலே சிறந்தது என கூறுகிறார்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி…!!
Next post இரணியல் அருகே கணவருடன் சேர்த்து வைக்க கோரி கைக்குழந்தையுடன் பெண் போராட்டம்…!!