மேற்கு மாம்பலத்தில் பெண் வக்கீலை கொன்ற மர்ம வாலிபர் யார்?: கைது செய்ய போலீஸ் தீவிரம்…!!
சென்னை மேற்கு மாம்பலம் முத்தாளம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) என்கிற பெண் வக்கீல் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.
கணவர் பிரபாகரனை பிரிந்து வாழ்ந்த இவர் தனியாகவே வசித்து வந்தார். லட்சுமி சுதாவின் மகன் கார்த்திகேயன் பெங்களூரில் உள்ளார்.
வக்கீல் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு அவரது தங்கை வித்யா அடிக்கடி வந்து செல்வார். நேற்று மாலையில் அவர் வந்து பார்த்த போது வெளிப்பக்கமாக வீடு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து குமரன் நகர் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் வக்கீல் லட்சுமிசுதா கத்தி குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அழுகிய நிலையில் காணப்பட்ட அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
லட்சுமி சுதாவை கொலை செய்த வாலிபர், அவருக்கு நன்கு தெரிந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். இதன் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கடந்த 31-ந்தேதி அன்று மர்ம வாலிபர் ஒருவர் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. அக்கம் பக்கத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரிய வந்தது. அந்த வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. அவர் லட்சுமி சுதாவுக்கு நன்கு அறிமுகமான நபராகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இவர்தான் லட்சுமி சுதாவை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
அந்த வாலிபர் லட்சுமி சுதாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எதையோ எதிர்பார்த்து அந்த வாலிபர் வந்துள்ளார் என்றும், அது கிடைக்காததால் அவர் லட்சுமி சுதாவை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மாயமான வாலிபர் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.
இதேபோல் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் மூதாட்டி சாந்தி கொலையிலும் துப்பு துலங்கி வருகிறது. கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்தும் தென் சென்னை கூடுதல் கமிஷனர் சங்கர் மேற்பார்வையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating