வண்டுகளை சாப்பிடுங்க! ஆரோக்கியமாக இருங்க…!!

Read Time:2 Minute, 53 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90வண்டுகளில் அதிகமான சத்துக்கள் உள்ளதால் அதனை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினர், சுமார் 1,900 வண்டுகளை பிடித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த வண்டுகளில் உள்ள சத்துக்கள் குறித்து ஆய்வு செய்தபோது Cricket என்ற வண்டில் அதிக அளவில் புரோட்டின் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வண்டினை மாவாக பொடி செய்து உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன.

இந்த வண்டின் சுவையானது வால்நட் பருப்பின் சுவைக்கு இணையாக உள்ளது என ஆய்வில் கலந்துகொண்ட நபர் ஒருவர் கூறியுள்ளார்.

குறிப்பாக சைவ பிரியர்களாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்து என்பது இன்றியமையாத ஒன்று. அந்த இரும்புச்சத்தானது வண்டுகளில் அதிகமாக நிறைந்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரும்புச்சத்து குறைபாட்டால் அனிமியா, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, அறிவாற்றல் பிரச்சனைகள், மகப்பேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வண்டுகளை சாப்பிடலாம். grasshoppers, crickets, mealworms மற்றும் buffalo worms ஆகியவற்றில் இருப்புச்சத்து, கால்சியம், மாங்கனிஷ், காப்பர், ஜிக்ங் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

மாட்டிறைச்சியில் உள்ள இரும்புச்சத்தினை விட வண்டுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. மனித உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் இதில் அதிகளவில் உள்ளன என்பதே இந்த ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

எனவே வண்டுகளை பார்த்தால் பயந்து ஓடிவிடாமல், அதனை பிடித்து வாயில் போட்டுவிடுங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பதிவு ரத்து ஏன்? – தலைவர், பொதுச்செயலாளர் விளக்கம்…!!
Next post கவலை வேண்டாம்..!! விமர்சனம்