ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்யத் திட்டமா…? நபர் ஒருவர் கைது…!!

Read Time:1 Minute, 48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-8ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்கானிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த போது, தோட்டா ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஹோமாகம, பிட்டப்பன பகுதியில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழக பகுதியை பார்வையிட சென்ற வேளை தோட்டா ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கட்டட நிர்மாணிப்பு பகுதிக்கு வெல்டிங் சேவை செய்வதற்காக குறித்த நபர் வந்துள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சந்தேகநபர் நேற்று இரவு அவ்விடத்திற்கு சேவைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தோட்டா பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். எனினும் அதனை ஏன் அருகில் வைத்திருந்தார் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கைது செய்யப்பட்ட நபரை ஹோமாகம பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலை பிரி்ந்தது ஏன் கெளதமி சொன்ன விளக்கம்…!! வீடியோ
Next post புகையிரதத்தில் மோதி செவிப்புலனற்ற முதியவர் பலி…!!