இன்று முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்வு..!!

Read Time:1 Minute, 48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள் காரணமாக இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.

இணைய டேட்டா பக்கஜ்களுக்கான கட்டணங்ளுக்காக அறவீடு செய்யப்பட்டு வந்த 10 வீத தொலைதொடர்பு வரி தற்போது 17 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வற் வரிச் சட்டத்தின் அடிப்படையில் தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொலைபேசி கட்டணங்களுக்காக 27 வீத வரியே அறவீடு செய்யபட்டு வந்தது. எனினும் தற்போது வற் வரி அதிகரிப்பினால் மொத்த வரி சுமார் 50 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் நுகர்வோருக்கும் நியாயமான ஒர் தீர்வு வழங்கும் வகையில் கட்டணங்களில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் யோசனை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்! ஏற்பட போகும் ஆபத்து…!!
Next post மலையேறச் சென்ற பல்கலைக்கழக மாணவன் வாவியில் மூழ்கி மரணம்…!!