புளூட்டோவில் இருந்து பூமிக்கு 15 மாதம் கழித்து வந்த தகவல்…!!

Read Time:1 Minute, 39 Second

201610311447263756_15-months-later-nasas-pluto-probe-sends-back-last-bit-of_tmbvpfசூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்களில் மிக சிறியது புளூட்டோ. இந்த கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அங்கு ஆய்வு நடத்திவரும் நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் தகவல்கள் மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளது. அத் தகவலை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி அனுப்பி வைத்தது.

இத்தகவல் 15 மாதங்களுக்கு பிறகு தான் பூமியை வந்தடைந்துள்ளது. ஆனால் இந்த தகவல் ஒரே நாளில் வந்து சேர்ந்து இருக்க வேண்டும்.

விண்வெளியில் 8 ஆயிரம் மைல் தொலைவில் அப்படியே தடைபட்டு கடந்த வாரம் தான் வந்து சேர்ந்தது.

இது குறித்து புளூட்டோ கிரகத்தின் ஆய்வு திட்ட மேலாளர் ஆலிஸ்பவ்மேன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘300 கோடி மைல்களுக்கு அப்பால் நிலை நிறுத்தப்பட்டுள்ள விண்கலத்தில் உள்ள டிரான்ஸ்மீட்டர்களில் இருந்து ரேடியோ சிக்னல் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டதால் தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இதை சரிசெய்ய விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
Next post வியாசர்பாடியில் ரவுடி கொலை: 6 பேர் போலீசில் சரண்…!!