ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை..!!
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவும், லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தீவிர சிகிச்சைக்குப்பின் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பிசியோதெரபிஸ்டுகள் பிசியோ தெரபி சிகிச்சை அளித்தனர்.
லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே ஏற்கனவே முதல்கட்ட சிகிச்சை அளித்தார். அதன்பிறகு மீண்டும் சிகிச்சை அளிக்க டாக்டர் ரிச்சர்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை வந்தார். அவர் தொடர்ந்து சென்னையிலேயே தங்கியிருந்து ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இன்று காலை டாக்டர் ரிச்சர்டு அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்.
ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி ஆஸ்பத்திரி முன்பு இன்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வெள்ளை பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வேண்டினர்.
அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தலையில் பூசணிக்காயை வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி ஆஸ்பத்திரியை சுற்றி வந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-
முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு மறுநாளான இன்று அமாவாசை தினம் என்பதால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 68 பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி பூஜை நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். எல்லோருடைய பிரார்த்தனையால் பூரண நலம்பெற்று வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating