தீபத்திருநாளில் நடந்த அவலம்: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த லொறி: பொலிசாருடன் பொதுமக்கள் முறுகல்…!!

Read Time:3 Minute, 56 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதான வீதியின் அருகாமையிலுள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது.

கொழும்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தின் சில்லு வெடித்ததில் விபத்துக்குள்ளாகிய நிலையில் அருகில் இருந்த வீடு ஒன்றில் மோதியதில் வீடு முற்றாக இடிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் அகப்பட்டதில் பெரும் சிரமத்தின் மத்தியில் மூன்று பேரையும் வெளியில் எடுத்துள்ளனர்.

அதில் சிவகுமார் கவில்ராஜ் (வயது 23) கட்டிட இடிபாடுக்குள் அகப்பட்டதினால் காயம் ஏற்ப்பட்டதில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது சுமார் அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாக வீட்டின் உரிமையாளர் நடராஜா சிவகுமார் தெரிவித்தார்.

தனது குடும்பம் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்துவருகின்ற நிலையில் இன்று தீபாவளியை கொண்டாட இருந்த தருனத்தில் வீடே இல்லாத நிலையில், முற்றாக இடிந்து தரைமட்டமாக வெறும் உடைந்த கல்லும் தூசியும் தான் மிஞ்சியுள்ளது.

வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் கட்டிட இடிபாடுக்குள் அகப்பட்டு உடைந்து போயுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் என்னுடைய வீட்டையும் அதற்குள் உடைபட்ட பொருட்களையும் உடனடியாக பெற்றுத்தரவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

வீட்டில் சமையலறை மாத்திரம் தான் எச்சியுள்ளது. உறங்குவதற்குகூட வீடு இல்லை மர நிழலில்தான் இருக்கவேண்டுமென மன ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

குறித்த வான லொறியின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எங்களால் பொலிஸ் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது,

குறித்த இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எங்களால் பொலிஸ் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது, லொறியின் உரிமையாளர் குறித்த வீட்டை கட்டி அதற்கான சேதமடைந்த பொருட்களையும் பெற்றுத்தருவேன் என உறுதியளித்தால் மாத்திரம் லொறியை குறித்த இடத்தில் இருந்து கொண்டு செல்வதற்கு அனுமதிக்க இடமளிக்கப்படும் என பொலிசாருடன் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலை இளைஞன் தற்கொலை…!!
Next post தீபாவளிக்கு தலதளபதியின் ப்ளான் இது தான்?