ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் பலி 25 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா…!!

Read Time:1 Minute, 54 Second

201610212048198289_odisha-health-minister-resigns-over-bhubaneswar-hospital_secvpfஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 நோயாளிகள் பலியான நிலையில், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீவிபத்து தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணைக்கு முதல்-மந்திரி நவீன்பட்நாயக் உத்தர விட்டார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா புவனேஸ்வர் வந்து தீ விபத்து நடந்த மருத்துவமனையை பார்வையிட்டார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை நிர்வாகிகள், பொறுப்பாளர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா அதானு சப்யாசச்சி நாயக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

‘மருத்துவமனை தீ விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் அதானு சப்யாசச்சி நாயக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கடிதத்தை கவர்னருக்கு அனுப்பியிருக்கிறேன்’ என முதல்வர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பூரில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது…!!
Next post காதலனை தேடிவந்த இளம்பெண் கற்பழிப்பு: காங்கிரஸ் செயலாளர் கைது..!!