இதை கூடவா ஆபாசமாக பார்ப்பீர்கள்: ஒரு பெண்ணின் பதிவு..!!
மார்பகப் புற்றுநோய்(Breast cancer) என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று.
இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்.
பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது.
இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஆனால், பல்வேறு பெண்கள் இதனை வெளியில் சொல்வதற்கு தயக்கப்பட்டுக்கொண்டு ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்து விடுகிறார்கள்.
பின்னர் நாட்கள் நகர்ந்தபின்னர்தான், அதன் வீரியத்தை அறிந்து மருத்துவரை நாடுகிறார்கள், இவ்வாறு பெண்கள் தயக்கப்படுவதற்கு இந்த சமூகத்தின் பார்வையும் ஒரு காரணம்.
ஒரு பெண்ணின் உடல், வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு மத்தியில், இதுபோன்ற நோய் தங்களுக்கு இருப்பதை கூறினால் அதனை கூட ஆபாசமாக பார்ப்பார்களே என்ற எண்ணம்தான்.
அதற்கு உதாரணமாக பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவம் இதோ,
பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது கல்லூரியில் இருந்து நடந்து செல்கையில், 3 மாணவர்கள் கும்பலாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் ஒரு மாணவன், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் பற்றி கேட்கிறான், அதற்கு மற்றொரு மாணவன் முதிர்ச்சியடையவில்லையாம் அதனால் தான் இவ்வாறு வருகிறதாம் எனக்கூறி நக்கலாக சிரிக்கிறான்.
இவனது பதிலை கேட்ட மூன்றவாது மாணவனும் சத்தம்போட்டு சிரிக்க. இவர்கள் 3 பேரின் சிரிப்பு சத்தம், இப்பெண் நடந்து சென்ற சிறிது தூரம் வரை எதிரொலித்தது.
இந்த மாணவர்களின் உரையாடலை கேட்ட அப்பெண், அந்த மாணவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது முகநூலில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் உடல் என்பது காட்சிப்பொருள் அல்ல. ஒரு பெண்ணிற்கு வரும் நோயை கூட பாலின ரீதியாக பார்க்கும் அளவுக்கு தங்களது அறிவினை வளர்த்துக்கொள்ளாத மாணவர்களால் இவர்கள் உள்ளார்கள்.
புற்றுநோயை கூட கேலி செய்து சிரிக்கும் அளவுக்கு, புரிதல் இன்றி இந்த சமூகம் உள்ளது. இதனால் தான் பாகிஸ்தான் நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 40,000 பெண்கள் மார்பக புற்றுநோயின் காரணமாக உயிரிக்கின்றனர்.
ஆசிய நாடுகளிலேயே, புற்றுநோய் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பாகிஸ்தான் பெண்கள் தான்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் ஏற்படவேண்டும். இந்த சமூகத்தின் தவறான பார்வையை கண்டுகொள்ளாமல் இதற்கான முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating