நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்…!!
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. 2005 – ல் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘அருந்ததி’ படம் பெரிய திருப்பு முனையை கொடுத்தது. இந்த படம் தமிழகத்திலும், ஆந்திராவிலும் வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு மளமளவென படங்கள் குவிந்தன.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தெலுங்கிலும் கை நிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். அனுஷ்கா பற்றி ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்தன. நடிகர் ஆர்யாவுடன் இணைத்து பேசப்பட்டார். தெலுங்கு நடிகர் பிரபாசை காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை அவர்கள் மறுத்தனர்.
அனுஷ்காவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. அவரை விட வயது குறைந்த நடிகைகள் பலர் திருமணம் செய்து குடும்பம் நடத்த போய் விட்டனர். எனவே அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணத்தை முடித்து விட பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை பார்ப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஒருவரை பேசி முடித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிங்கம் படத்தின் 3 – ம் பாகமாக தயாராகும் எஸ் – 3, மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய 4 படங்களில் அனுஷ்கா நடித்துக்கொண்டு இருக்கிறார். எஸ் – 3 படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. பாகுபலி படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
பாகுபலி படம் திரைக்கு வந்ததும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக புதிய படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.
சமந்தாவுக்கும், அனுஷ்காவுக்கும் அடுத்தடுத்து திருமணங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating