பெண்கள் வேலையில் மகிழ்ச்சியடையும் வழி…!!

Read Time:8 Minute, 51 Second

%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-585x333பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி தேவை. அங்கு நிம்மதி குறைந்தால் அது வீட்டிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். அதனால் மனஅழுத்தம் உருவாகும். ஆரோக்கியமும் கெடும்.

இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென்றால் பல பெண்கள் வேலை வேலை என்று பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வேலை தனக்கு மகிழ்ச்சி தருகிறதா? மனஅழுத்தம் தருகிறதா? என்று அவர்களுக்கே தெரிவதில்லை.
நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் கீழ்கண்ட அறிகுறிகளை வைத்து நீங்களே அதை கண்டுபிடித்து விடலாம்.

1. நீங்கள் பார்க்கும் வேலை உங்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைய வேண்டும். உங்கள் திறமையை வளர்த்து கொள்ளவும். பலவிதமானவர்களை கையாளவும், வழிநடத்தவும் கற்று கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்கித்தரும் விதத்தில் அது அமைய வேண்டும். நீண்டகால காத்திருந்தும் இவ்விதமான வாய்ப்புகளுக்கு வழியில்லை என்பது தெரிந்தால் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை அறிந்தால் அந்த வேலையால் உங்களுக்கு நிரந்தரமான மகிழ்ச்சி ஏற்படாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தீர்வு

சம்பளம் குறைவாக இருந்தாலும், வேலை மனதுக்கு பிடித்திருந்தால் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஏனெனில் மகிழ்ச்சி முக்கியம். மகிழ்ச்சியோடு இருந்தால் பிற வழிகளில் வருவாய் ஈட்ட முடியும். ஆனால் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பில்லாத பணியாக இருந்தால் அதில் இருந்து நீங்கள் விலகிவிடலாம்.
இதில் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னால் உங்களையே நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

சரியான துறையில் நுழைந்திருக்கிறீர்களா? உங்கள் இலங்கு சரியானதா? பணியில் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்றால் அதற்கு நீங்கள் காரணமா? நிர்வாகம் காரணமா? என்பதை எல்லாம் சுயபரிசோதனை மூலம் அறிய வேண்டும். தேவைப்பட்டால் கவுன்சலிங் தருபவர்களிடம் சென்று சூழலை விளக்கி ஆலோசனை பெற வேண்டும். எதிர்பார்த்த துறை கிடைக்காதததால் இந்த பணியில் சேர்ந்திருந்தாலோ, வேறு துறையில் விருப்பம் இருந்தாலோ பொறுடையுடன் திறமைகளை வளர்த்து கொண்டு துறை மாறிவிடலாம். திறமைகளை வளர்த்தால் வாய்ப்புகளுக்கான திறந்து விடும் என்பது உண்மை.

2 காலையில் எழுந்தவுடன் களைப்பு தெரிகிறதா? பரபரப்பும் அவசரமும் தொற்றிக்கொள்கிறதா? இன்றைய வேலை சுமூகமாக நடக்குமா? அல்லது மேலதிகாரியிடம் மோத வேண்டியிருக்குமா? என்பது போன்ற எண்ண ஓட்டங்கள் மனதை அரிக்கிறதா? இந்த மனப்போராட்டத்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் மேல் எரிச்சலை வெளிப்படுத்துறீர்களா? அந்த நாளே வெறுமையாக இருப்பதுபோல் உணர்கிறீர்களா யாராவது எந்த வகையிலாவது நமக்கு உதவ மாட்டார்களா? நமது இந்த நிலை மாறாதா?என்ற எண்ணங்கள் ஏற்படுகிறதா?….

இப்படி எல்லாம் ஏற்பட்டால் நீங்கள் பார்க்கும் வேலையால் மனஅழுத்தத்தை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த வேலையால் அலுவலகத்தில் மட்டும்ல்ல, வீட்டிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

தீர்வு…

நாம் நிதானமின்றி செயல்படும் போது நிறைய தவறுகள் நடந்து விடும். நீங்கள் பார்க்கும் வேலைதான் நிதானம் இழக்க காரணம் என்றால் முடிந்தவரை அந்த வேலையில் இருந்து நீங்கள் விலகிவிடுவது நல்லது. நீங்கள் நிதானமாக செயல்பட எந்த துறை அனுமதிக்கிறாதோ அதில் சேர்ந்து பணியாற்றுங்கள்.‘

3 மேலதிகாரி மற்றும் உடன் பணிபுரிபவர்கள் மீது வெறுப்பு பணியின் மீது சலிப்பு ஏற்படுகிறதா? நீங்கள் எந்தவிதமான பணியை செய்து கொடுத்தாலும் அதை குறை கூறுகிறார்களா? உங்கள் மீது எரிந்து விழுகிறார்களா? அடிக்கடி நிகழும் இது போன்ற செயல்கள் உங்களுக்கு எரிச்சலுட்டுகிறதா? இது பொருந்தாத வேலைக்சூழலின் முக்கிய அறிகுறி. இதுவும் மகிழ்ச்சிக்குரியதல்ல.

தீர்வு ,,

மேலதிகாரி மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் ஏற்படும் வெறுப்புக்கு சரியான தீர்வு பேச்சுவார்த்தைதான். மேலதிகாரியை ஒரு அமைதியான நேரத்தில் சந்தித்து பேசுங்கள். நீங்கள் வேலையை தட்டிக் கழிப்பவரோ சரியாக பணியாற்றாதரோ அல்ல என்பதை தெளிவுபடுத்துங்கள். எந்த பணியை உங்களால் திறம்படி செய்ய முடியும் என்பதை விளக்கி அது தொடர்பான பணிகளை கேட்டு வாங்கி சிறப்பாக செய்து கொடுங்கள். பணிகளில் கவனம் செலுத்தி மற்றவர்கனின் மீதானஅவசியமற்ற கவனங்களை புறக்கணித்தும், தவிர்த்தும் மன இறுக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.

4..கவனம் சிதறுவதும் மறதி அதிகரிப்பதும், வாழ்வில் பாதுகாப்பு குறைந்து போன்ற உணர்வு ஏற்படுவதும் வேலைச்சூழல் சிறப்பற்றதாக இருப்பதை காட்டும். வேலையை முடித்து கொடுக்க நீண்ட காலம் எடுத்துகொள்வது பணியின் சுமையை காட்டும். வாழ்க்கையில் நிறைவை அடைவதற்கு காலதாமதாமாகும் என்ற எண்ணம் மேலிடும்.

இத்தகைய எண்ணங்களால் ஏற்படும் மனக்கலக்கம் அலுவலகபணிகளை தாண்டி குடும்பத்திலும் எதிரொலிக்கும். இது உடல் மற்றும் மனோரீதியான ஆரோக்கிய குறைபாடுகளை உருவாக்கும். இதுவும் வேலை தரும் அழுத்தத்தின் அறிகுறி தான்.

தீர்வு..

நிரந்தரமான பணியை போன்ற நிம்மதியை வாழ்வில் எந்த வரத்தாலும் தர முடியாது. வேலை இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. விருப்பமான துறையில் சில அசவுகரியங்களை சந்திக்க நேர்ந்தால் பொறுமையுடன் சகித்து கொள்வதே சந்தோஷமான பணிச்சூழலைத்தரும். வேலையை விரும்பி செய்வதன் மூலம் உங்கள் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கலாம்.

வேலையை விரும்புங்கள், வேலையில் கவனம் செலுத்துங்கள், வேலையை நேசியுங்கள்,

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரை நோயாளிகளே!… நீங்க மிஸ் பண்ணாமல் குடிக்க வேண்டிய பானம்…!! வீடியோ
Next post அதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்…!!