பல்லாயிரம் கோடி பெறுமதியான பச்சை மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு..!!

Read Time:2 Minute, 2 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது.

உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல் ஒன்றை அவர்கள் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். இதன் எடை சுமார் 175 டன் என கூறப்படுகிறது.

கண்டெடுக்கப்பட்டுள்ள பாறையின் மொத்த மதிப்பு இந்திய பணத்தில் சுமார் 1100 கோடி என கருதப்படுகிறது.

வெட்டி எடுக்கப்பட்டு மெருகேற்றப்படாத குறித்த கற்களை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே குறித்த கற்களினால் ஆபரணங்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்க பயன்படுத்த உள்ளனர்.

மியான்மர் அரசுக்கு அந்த மாணிக்கக் கற்களுக்கான உரிய விலையை சீனா வர்த்தகர்கள் அளிக்க உள்ளனர். மியான்மரின் மொத்த வருவாயில் பாதி அளவிற்கு பச்சை மாணிக்கக் கற்களினால் பூர்த்தி செய்யப்படுகிறது.

குறித்த மாணிக்கக் கல்லை தோண்டி வெளியே எடுத்த சுரங்க தொழிலாளர்களுக்கு உரிய சன்மானம் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இன்னும் அவை உறுதி செய்யப்படவில்லை.

தோண்டி எடுக்கப்பட்ட கற்பாறை அரசுக்கு சொந்தம் என்பதால், அரசு வழங்கும் சன்மானம் மட்டுமே தொழிலாளர்களுக்கு சொந்தம்.

ஆனால் இதுவரை இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்தினரின் சித்திரவதைக்கு பயந்து நாட்டை விட்டே தப்பி ஓடிய யாழ் இளைஞன்…!!
Next post நுரைச்சோலை அனல் மின்நிலையம் ; மூன்று இயந்திரங்கள் வெடிப்பு ; விரைவில் காரணம் வெளியாகும்…!!