கனடாவில் ஆசிய நாட்டு சிறுமியை கோமா நிலைக்கு தள்ளிய வைத்தியம்…!!

Read Time:3 Minute, 6 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90கனடா- நான்கு வயது சிறுமி பல் மருத்துவரிடம் சென்ற பின்னர் நினைவிழந்து கோமா நிலைக்கு திரும்பி விட்டாள் என எட்மன்டனை சேர்ந்த குடும்பம் தெரிவிக்கின்றது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இச்சிறுமி இந்நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அம்பர் அத்வால் என்ற இச்சிறுமி நினைவிழந்த நிலையில் கிளென்றோஸ் புனர்வாழ்வு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்து. அண்மையில் சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டாள் என இவளின் உறவினரான அமன் பிரீட் சிங் தெரிவித்தார்.

2016 செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இவளிற்கு மூளை காயம் ஏற்பட்டுள்ளதாக MRI சோதனையில் தெரிவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனாலும் காயத்தின் தீவிரம் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதே மாதம் பல் மருத்துவத்திற்காக சென்ற அம்பர் சிகிச்சையை தொடர்ந்து கோமா நிலைக்கு சென்று விட்டாள். வழக்கமான பல் சோதனையின் பின்னர் விசேட நிபுணருக்கு பரிந்துரைக்கப்பட அவளை பரிசோதித்த நிபுணர் செயல் முறை செய்ய வேண்டும் என கூறியதுடன் ஒரு கடைசி நேர ரத்து இருப்பதால் அன்றே சிகிச்சை செய்யலாம் என கூறப்பட்டது.

சிறுமி காலை உணவு சாப்பிட்டு விட்டாள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் பொதுவான மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சத்திர சிகிச்சையின் போது அம்பர் ஆக்சிஜன் குறைபாட்டினால் அவதிப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டாள்.

இவளிற்கு மயக்க மருந்து கொடுத்த பல் வைத்தியர் டாக்டர் வில்லயம் மேத்தர் நோயாளிகளிற்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததென குளோபல் செய்தி உறுதிப்படுத்தியது.

மதிப்பாய்வுரை செய்யும் வரை மேலதிக விபரங்கள் மறுக்கப்பட்டுள்ளன.

“உங்கள் மருத்துவரை சரியாக தெரிவு செய்யுங்கள்.யாருடைய தவறு என தெரியாது. எத்தகைய செயல் முறைக்கு ஆளாக போகின்றோம் என முன்னதாக கண்டறியுங்கள்” என அமன் பிரீட் சிங் அறிவுறுத்துகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த 5 விஷயத்தை பாலோ பண்ணுங்க! ஆரோக்கியமா இருக்கலாம்…!!
Next post இலஞ்சம் வாங்கும் பொலிசாருக்கு எதிராக விசேட விசாரணைப்பிரிவு…!!