பெண்கள் எதற்காக சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது?

Read Time:5 Minute, 21 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70இந்த உலகில் ஒரு உயிர் ஜனிக்க காரணமாக இருக்கும் பெண்களுக்கு, தான் ஜனித்த உயிர் இறுதியில் பிரிந்து செல்லும்போது அவருடன் இறுதிவரை சுடுகாட்டிற்கு பயணிக்க முடியாத சமூககட்டுப்பாடு இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்து, கிறித்துவம், இஸ்லாம் என அனைத்து மதத்தின்படியும் வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால், பெண்களின் பங்களிப்பு வீட்டோடு முடிந்துவிட்டால், ஆண்களின் பங்களிப்பு சுடுகாடு வரை செல்கிறது.

அந்த வீட்டில் உள்ள ஆண் வாரிசுகளே இறந்துபோன உறவுகளுக்கு கொல்லி வைக்க வேண்டும். பெண்களுக்கு அதற்கான உரிமை இல்லை என்ற சமூககட்டுப்பாடு காலம்தொட்டே பின்பற்றப்படுகிறது.

ஆனால், சுடுகாட்டிற்குள் பெண்கள் நுழையக்கூடாது என்ற சமூககட்டுப்பாட்டை தகர்த்தெறிந்து, சென்னை மாநகராட்சி மயானத்தில் தைரியத்துடன் வேலை பார்த்து வருகிறார்கள் எஸ்தர் சாந்தி, பிரவீணா ஆகிய இருபெண்கள்.

பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாததற்காக காரணங்கள் என்ன?

பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அது மூடப்பழக்கவழக்கமும், இந்த சமூகத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடும் ஆகும்.

அன்றைய காலத்தில் பெண் பிள்ளைகள் வீட்டினை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்துவந்தது. வீட்டை விட்டுக்கூட வெளியே செல்லாதவர்கள் எவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஏனெனில், சுடுகாடு என்பது மாயமோகினிகளும், இரத்த காட்டேறிகளும், காத்து கருப்பும் உலாவும் இடம் என்ற கட்டுக்கதைகள் உள்ளன. அப்படி ஆண்களுளோடு சேர்ந்து பெண்களும் சுடுகாட்டிற்கு சென்றால் அங்கிருக்கும் காத்து கருப்பு முதலில் இவர்களை தான் தாக்கும்.

ஏனெனில் பிறப்பிலேயே பெண்கள் மென்மையானவர்கள் என்பதால் தான், பேயாக இருந்தாலும் ஆண்கள் மீது இறங்குவதை விட பெண்கள் மீது முதலில் இறங்கி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறது என்று கதை சொல்லப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக சொத்து பிரச்சனை. அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் வேறு வீட்டிற்கு வாழப்போகிறவன் தானே, அதனால் அவளுக்கு தேவையான நகைகளை அணிவித்து செல்ல மகளாய் இருந்தவளை நல்ல மருமகளாய் வேறு வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

பெண் குழந்தையின் உறவு பாதியில் முடிந்துவிடுகிறது. ஆனால் ஆண் வாரிசு அப்படி இல்லை. பெற்றோர்களின் கூடவே இருந்து கடைசி வரை கஞ்சி ஊத்துவான். “வீதி வரை மனைவி என்றால், காடு வரை பிள்ளை”. கடைசியாக சுடுகாட்டிற்கு வரப்போவது அந்த ஆண் வாரிசுதான்.

தனக்கு கொள்ளி வைக்கும் மகனுக்கே அத்தந்தையானவர் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் போய்சேரும் என்ற காரணத்தினாலும் கூட, ஆண்களே சுடுகாட்டிற்கு செல்லும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது.

அன்று தொடங்கிய இந்த சமூககட்டுப்பாடு இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒருசில இடங்களில் வீட்டில் ஆண் துணை இல்லாத பெண் பிள்ளைகள், சுடுகாட்டிற்கு தைரியமாக களமிறங்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறத்தான் செய்கின்றன.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் பலி…!!
Next post இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை…!!