மனைவியை மயக்குவது எப்படி?
மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே!
கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!
ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!
இது ஆண்களுக்கு மட்டும்…
மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!
1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு ‘உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே!
பாதிநாள் ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!’ என்ன சரியா?
2. மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!
காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.
லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.
3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும்.
கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.
4. மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம்.
எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.
5. மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும்.
அப்படியில்லாமல் ‘இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே’, ‘அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை’ இப்படிச் சொல்லணும்!
6. ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..
7. வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.
8. வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.
9. அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!
10. ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!
11. எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.
12. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!
13. வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.
14. வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும். ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.
15. அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.
16. ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.
17. மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..
18. மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.
19. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.
20. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.
இப்படி இன்னும் நிறையவுள்ளது..
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating