லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும்போது 10 விமானங்களை தகர்க்கும் சதி முறியடிப்பு
லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும் 10 விமானங்களை நடுவானில் ரசாயன குண்டுகள் மூலம் தகர்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் 21 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நாசவேலைகளுக்கு தீவிரவாதிகள் புதுப்புது உத்திகளை கையாளுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சியையும், ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியையும் வீழ்த்தியதால் அமெரிக்கா மீது ஏற்கனவே சர்வதேச தீவிரவாதிகள் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது அவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பதாலும், அமெரிக்காவுக்கு இங்கிலாந்து நெருங்கிய நட்பு நாடு என்பதாலும் அந்த இரு நாடுகளும் தான் தீவிரவாதிகளின் முக்கிய குறியாக உள்ளது.
நடுவானில் விமானங்களை தகர்க்க சதி
ஏற்கனவே இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி 52 பேரை கொன்ற தீவிரவாதிகள், இப்போது அங்கு நூதன முறையில் நடுவானில் விமானங்களை தகர்க்க திட்டமிட்டு இருந்தது கண்டு’டிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளின் இந்த சதிவேலை உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து லண்டன் நகரில் போலீசார் எப்போதும் `உஷார்’ நிலையில் உள்ளனர்.
21 தீவிரவாதிகள் கைது
இந்த நிலையில் லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக இங்கிலாந்து உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு போலீசார் நடத்திய சோதனையில் தலைநகர் லண்டனிலும் இங்கிலாந்தின் 2-வது பெரிய நகரமான ‘ர்-ங்கா-லும் மற்றும் தாமஸ் பள்ளத்தாக்கிலும் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை “ர்வீகமாக கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களை நடுவானில் வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டி இருந்ததும் தெரியவந்தது. இதனால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ரசாயன திரவ வெடிகுண்டு
விமானங்களை தகர்க்க, இந்த தீவிரவாத கும்பல் இதுவரை கையாளப்படாத புதிய உத்தியை வகுத்து இருந்தது.
அதன்படி, லண்டன் நகரில் இருந்து அமெரிக்கா செல்லும் 10 விமானங்களை இவர்கள் குறி வைத்து இருந்தனர். ஒவ்வொரு விமானத்திலும் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி செல்வான். ஆனால் அவன் வெடிகுண்டு எதையும் எடுத்து செல்லமாட்டான். அதற்கு பதிலாக தனது கைப்பையில் திரவ வடிவிலான ரசாயன பொருட்களை எடுத்துச் செல்வான். விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருக்கும் போது, அந்த ரசாயன திரவங்களை குறிப்பட்ட விகிதத்தில் கலந்து வெடிக்கச் செய்வான். இதனால் விமானம் தூள் தூளாக சிதறும். அதில் இருக்கும் பயணிகள் அனைவரும் பலி ஆவார்கள்.
சதி முறியடிப்பு
இப்படி ஒரே நாளில் 10 விமானங்களை தகர்த்து ஆயிரக்கணக்கான பேரை நடுவானிலேயே சமாதியாக்க தீவிரவாதிகள் திட்ட-ட்டு இருந்தனர். ஆனால் தக்க சமயத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் மிகப்பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. பலத்த உயிர்ச் சேதமும் தவிர்க்கப்பட்டது.
சூட்கேஸ்கள் உள்ளிட்ட `லக்கேஜ்’களில் வெடிபொருளை வைத்து மறைத்து கொண்டு சென்றால் பரிசோதனையில் கண்டு’டிக்கப்பட்டு விடும் என்பதால் நூதன முறையில் திரவ வெடிபொருளை கைப்பையில் வைத்து விமானத்துக்குள் கொண்டு செல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர்.
விமான நிலையம் மூடப்பட்டது
தீவிரவாதிகளின் இந்த நாசவேலை திட்டம் அம்பலமானதும் நேற்று இங்கிலாந்து முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தற்காலிகமாக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட புற நாடுகளுக்கு செல்ல இருந்த அனைத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புரான்சு உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே புறப்பட்டு லண்டனுக்கு வந்து கொண்டிருந்த விமானங்களும் வேறு நாடுகளுக்கு திருப்ப விடப்பட்டன. லண்டனுக்கு தற்காலிகமாக விமானங்களை இயக்க வேண்டாம் என்று ஐரோப்பய நாடுகளை இங்கிலாந்து விமான நிலையங்கள் குழுமம் கேட்டுக் கொண்டது.
பலத்த பாதுகாப்பு
இந்த சதித்திட்டம் பற்றி இங்கிலாந்து உள்துறை மந்திரி ஜான் ரெய்ட் கூறுகையில், “நடுவானில் வெடிகுண்டுகள் மூலம் பல விமானங்களை தகர்த்து பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்தது” என்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, லண்டன் மற்றும் இங்கிலாந்தின் புற நகரங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டன. பாதுகாப்” படையினர் விமான நிலையங்களில் குவிக்கப்பட்டனர்.
பயணிகளுக்கு யோசனை
கைப்பைகள் எதையும் கொண்டு செல்ல வேண்டாம் என்று பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அத்துடன் மின்சார சாதனங்கள், பேட்டரியில் இயங்கும் லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மேலும் அவற்றை கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களை மட்டும் கொண்டு செல்லுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை -றும் பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.
புஷ்சுடன் பேச்சு
தீவிரவாதிகளின் இந்த சதித்திட்டம் பற்றியும், அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் இங்கிலாந்து பரதமர் டோனி புளேர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்சுடன் டெலிபோனில் பேசினார்.
விமானங்களை தகர்க்கும் சதித் திட்டத்தை தீட்டிய தீவிரவாதிகள் பன்லேடனின் அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க உள்துறை பாதுகாப்பு மந்திரி மைக்கேல் செர்டோப் தெரிவித்தார்.
லண்டன் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவிலும் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் பலப்படுத்தினார்கள். விமானங்களில் குளிர் பானங்கள், ஹேர்டை உள்ளிட்ட திரவ பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.