பெண்கள் கூறும் ரகசியங்கள்: காது கொடுத்து கேளுங்கள்…!!

Read Time:5 Minute, 2 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90பொதுவாக வாழ்க்கையில் 30 வயதுள்ள பெண்கள், அவர்களின் வாழ்வில் கிடைத்த அனுபவங்களை , தங்களிடம் பழகும் பெண்களிடம் அறிவுரைகளாக அல்லது ரகசியங்களாக கூறுவார்கள்.

நமக்கு ஒருமுறை கிடைத்த இந்த வாழ்க்கையை நாம் நமக்கு பிடித்தது போல சிறப்பாக அமைத்துக் கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்வில் உள்ள நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் கவலைகளை எளிமையாக எவ்வாறு கடந்து முன்னேற வேண்டும் என்பதை குறித்து பெண்கள் கூறும் கருத்துகள்!

உங்களை நீங்களே நேசித்து, உங்களுக்கு நீங்களே மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது இந்த சமூகத்தில் நீங்கள் நிலைத்து இருக்கவும், உறவுகளை வலுவாக வைத்துக் கொள்ளவும் முடியும்.

உங்கள் உயிருக்கு ஊட்டமளித்து, காதல் மற்றும் உறவுகளை மேல் உங்கள் உயிர் எது தொடர்பான ஆர்வத்தை நோக்கி பயணிக்க தூண்டுகிறதோ அந்த பாதையில் பயணம் செய்யுங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சிறப்பாக இருக்காது. எந்த வகையான எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை நல்ல நண்பர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ளக் வேண்டும்.

உண்மை என்றும் உங்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும். எனவே உங்கள் உண்மையான வாழ்வில் கிடைக்கும் வெற்றி தோல்விகளை ஏற்று கொண்டு உங்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களிடம் உண்மையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள், உங்களுக்கு பிடித்தது போல வாழ வேண்டும். நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்காக வாழ நினைத்து உங்களின் கொள்கைகளை கைவிடாமல், உங்களின் சிறந்த முடிவுகளை நீங்களே எடுத்துக் கொள்ள தயாராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களின் வாழ்வில் மற்றவர்களை புண்படுத்துவது போல நடந்துக் கொள்வதை தவிர்த்து, உங்களுக்கு பிடித்த செயல்களை எப்போதும் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் எப்போதும் உங்கள் வாழ்வில் தனிமையாக செய்யும் செயல்களில் தான் உங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றது. எனவே இளமை காலத்தில் நீங்கள் தனியாக பயணங்கள் செய்யும் தருணங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த பாடங்கள் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

தடைகள் இல்லாத நீரோட்டம் கடலை சேர்வதில்லை, எனவே, முயற்சிகள் சரியான நேரத்தில் பலனளிக்காமல் இருந்தால், அதிக தோல்விகள் ஏற்படும். இதனால் மனம் தளராமல், கவலை அடையாமல் இருக்க கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் உள்ள காதல், வாழ்க்கை, வேலை போன்ற அனைத்திலும் “முடியும்” என்ற சொல்லை நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்துவிடாமல் இருக்க வேண்டும்.
உலகில் இயற்கையில் அமைந்த கடல், சூரியன், மேகங்கள், சிறிய செடி, மொட்டு, பூக்கள், மழலை, காதல் என கண்களுக்கு ரசிப்பது போல் இருக்கும் காட்சிகளை, ரசிப்பதற்கென்று, சில நிமிடங்கள் ஒதுக்கி ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடிட்ட இடங்களை நிரப்பிய பார்த்திபன்…!!
Next post கமர்ஷியல் படத்தில் நடிப்பது ஜாலியாக இருக்கிறது: விஜய் சேதுபதி…!!