பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 150 பேர் பத்திரமாக வெளியேற்றம்…!!

Read Time:2 Minute, 8 Second

201609211800557951_fire-in-polyester-company-near-surat_secvpfகுஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள கிம் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் மூலப்பொருட்களில் தீ பிடித்ததால் வேகமாக பரவியது.

குடோன் பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் தொழிற்சாலைக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

தீவிபத்து ஏற்பட்டதும் இரவுப்பணியில் இருந்த 150 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்றும் சூரத் தலைமை தீயணைப்பு அதிகாரி எஸ்.கே.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க 15 தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன. மாலை வரை தீவிர முயற்சி செய்தும் தொழிற்சாலை பகுதியில் பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை எனினும் குறைந்த மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பூரில் காதல் திருமணம் செய்த பெண்ணை இழுத்துச்சென்ற பெற்றோர்…!!
Next post பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை காணமுடியவில்லை தற்கொலை செய்துகொண்ட தந்தை…!!