யாழ். கந்தரோடையில் நீரின்றி தவிக்கும் மக்கள்…!!

Read Time:5 Minute, 13 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4யாழ். கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாம் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் முகாமில் வசிக்கும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த கால போர் நடவடிக்கைகள் காரணமாக கடந்த-1990ஆம் ஆண்டு வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 41 வரையான பொதுமக்கள் யாழ். கந்தரோடையில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பெரும் சிரமத்தின் மத்தியில் வசித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் விடுவிக்கப்படாத நிலையிலுள்ள மயிலிட்டி, தையிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த மக்களே இம் முகாமில் வசித்து வருகின்றனர். இம் முகாமில் வாழும் மக்கள் கூலித் தொழிலேயே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இன்றி நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை காலமும் முகாமிற்கு அருகில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த நீர் மூலம் மக்கள் தமது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்தனர்.

குடிநீர் விநியோகத்துக்கென மேற்படி சபைக்கு முகாமிலுள்ள குடும்பம் ஒவ்வொன்றும் பணம் செலுத்தியும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் நீர் விநியோகத்துக்கானபணம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்து முகாம் மக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், முகாம் மக்கள் சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அப்பால் சென்றே குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இது குறித்துக் கடும் விசனம் வெளியிட்டுள்ள முகாம் மக்கள் தாம் குடிநீருக்கான பணத்தை தவறாது செலுத்தி வந்ததாகவும் சுட்டிக் காட்டினர்.

மேலும் கடந்த-12 ஆம் திகதி முகாமின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்த சிறுவர், மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குடிநீர் நிறுத்தப்பட்டமை தொடர்பிலும், இதனால் முகாம் மக்கள் எதிர்நோக்கி வரும் அசெளகரியங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் மறுநாள் உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் மேற்படி நலன்புரி நிலையத்தின் தலைவர் எஸ். சிவஞானத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறுவர், மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், உயரதிகாரிகளிடம் பேசிக் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உறுதியளித்தனர்.

எனினும், இதுவரை முகாம் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்…!!
Next post தாயின் சந்தோஷத்திற்காக உழைக்கும் 8 வயது சிறுவன்: நெகிழ்ச்சி சம்பவம்..!!