பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்கள் 17 பேரை கொன்றது யார்?
இலங்கையில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்களை கொன்றது யார்? என்ற பிரச்சினையில் விடுதலைப்புலிகளும், ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரான்ஸ் நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை சென்றனர். அங்கு அவர்கள் மூதூர் என்ற இடத்தில் தங்கி நிவாரணப் பணிகளை செய்து வந்தனர்.
இவர்களில் 17 பேர்களை சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மரண தண்டனையை நிறைவேற்றுவதைப் போல இவர்களது தலை, குண்டுகளால் பிளக்கப்பட்டுள்ளது. இவர்களது உடல்கள் அவர்கள் அலுவலகத்தில் கிடந்தன.
கண்டனம்
இந்த கொடூர கொலை குறித்து சர்வதேச சேவை குழுவின் செயல் இயக்குனர் மிரிபெல் கூறுகையில்,”சிலர் ராக்கெட் குண்டுகளாலும் மேலும் சிலர் துப்பாக்கி குண்டுகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.
இந்த கொலைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், ஐ.நா.சபையின் சிறப்பு தூதருமான கிளிண்டன் கூறுகையில்,”பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
யார் காரணம்?
இந்த கொலை சம்பவத்துக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதற்கு இலங்கை ராணுவமே காரணம் என்று விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று ராணுவம் குறை கூறியுள்ளது.
பிரேத பரிசோதனை
இந்தநிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திரிகோணமலை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காட்ட வந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இறுதிச்சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...