தலைசுற்றல், நரம்பு தளர்ச்சியா? பக்குவமான 10 டிப்ஸ்…!!

Read Time:3 Minute, 57 Second

487475547_640-585x329ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வீட்டிலேயே சில மருத்துவங்கள் உள்ளன.
நாம் உண்ணும் உணவுகளை சரியா விதத்தில் சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
சில வீட்டு மருத்துவ குறிப்புகள்.

1. வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

2. வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

3. தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

4. வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.

5. மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

6. பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

7. திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

8. குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

9. சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

10. நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட திரிஷா…!!
Next post ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்..!!