மஹிந்தவின் மனைவி விரைவில் கைது செய்யப்படுவாரா?

Read Time:2 Minute, 26 Second

mahinda-shirani-51முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது.

செஞ்சிலுவை சங்கத்தால் ‘சிரிலிய சவிய’ வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றி அதனைத் தனிபட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை இரகசியப் பொலிஸார் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நிசாந்த பீரிஸிடம் கோரியுள்ளனர்.

WPKA-0642 என்ற இலக்க தகட்டினை கொண்ட குறித்த வாகனம் இரண்டு தடவைகள் நிறம் மாற்றப்பட்டிருந்தது. கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து குறித்த வாகனம் செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகியின் ஹபரகட இல்லத்தில் இருந்து இரகசியப் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

‘சிரிலிய சவிய’ அமைப்பின் சமூக பணிக்காக வாகனம் கொண்டு வரப்பட்டதெனின் அடிக்கடி நிறம் மாற்ற வேண்டிய அவசியம் என்ன? 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் குறித்த வாகனம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கபடாமல் அதன் செயலாளரின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? போன்ற காரணங்களை முன்வைத்து இரகசியப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவு காட்சியை கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்ற கணவர்..!!
Next post சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் செய்துக் கொண்ட நடிகைகள்…!!