கட்டிப்பிடிப்பதில் இருக்கும் 10 விதங்களும், அதன் அர்த்தங்களும் பற்றி தெரியுமா?

Read Time:4 Minute, 51 Second

thewayyouhugyourpartnertellsalotaboutyourpersonality-585x439நாம் அனைவருமே ஒரே குணாதிசயங்கள் கொண்டிருப்பது இல்லை. இது, வெறும் நடை, உடை, பாவனை என்று மட்டுமில்லாமல். ஒரு விஷயம் அல்லது சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள், பழக்கவழக்கங்கள், திட்டுவது, கட்டியணைப்பது என ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் தான் செயல்படுத்துகிறோம்.

இதில், அன்பை, உறவில் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் கட்டிபிடிப்பதை வைத்து ஒருவர் எப்படிப்பட்ட நபர், அதன் மூலம் அவர் என்ன நினைக்கிறார் என்பதை யூகிக்க முடியும். இந்த பத்து வகைகளில் நீங்கள் எப்படி என்றும் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்…

கட்டிப்பிடிக்கும் முறை #1

பாக்கெட்டில் கைப்போடுவது!

போக்கிரி படத்தில் ஓர் பாடலில் விஜய், அசினுடன் இப்படி கைப்போட்டு நின்றுக் கொண்டிருக்கும் காட்சி தான் பலருக்கும் நினைவில் வந்து நிற்கும். இப்படி கட்டிப்பிடிப்பது நீங்கள் ரிலாக்ஸாக, பாதுகாப்பாக உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறதாம். (நிஜாமாவேவா?? அப்படி தெரியலையே!!)

கட்டிப்பிடிக்கும் முறை #2

நேராக பார்த்து கட்டிப்பிடிப்பது!
கட்டிபிடிக்கும் போது துணையின் கண்களை நேராக பார்த்தபடி இருப்பதில் ஓர் உயிர் இருக்கிறது. உலகத்திலேயே நீங்கள் அவரை மிகவும் நேசிக்கும் தருணமாக அது இருக்கும் என்பதை வெளிப்படுத்தும்.

கட்டிப்பிடிக்கும் முறை #3

தோள்களில் கைப்போடுவது!

தோள்களில் கைபோட்டு செல்லும் பழக்கம் காதலை வெளிப்படுத்துவதை விட, தோழமையை தான் வெளிப்படுத்துகிறது. எனவே, இவர் காதலை விட தோழமையாக தான் பழகுகிறார் என அர்த்தம்.

கட்டிப்பிடிக்கும் முறை #4

ஓரமாக நின்று கட்டிபிடிப்பது!

இதுவும் நட்புணர்ச்சியை வெளிப்படுத்தும் முறை தான். இது, தோழமையை நெருக்கமாக்கும் விதமாக இருப்பதாகும்.

கட்டிப்பிடிக்கும் முறை #5

தோள் வழியாக இடுப்பை கட்டியணைப்பது!
இந்த வகையில் கட்டிப்பிடிப்பது, ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வதை வெளிப்பட்டதுவது ஆகும்.
கட்டிப்பிடிக்கும் முறை #6

முதுகை தேய்ப்பது!

இறுக்கமாக முதுகை தேய்ப்பது போன்று கட்டியணைப்பது. ஆறுதல் கூறும் வகையிலான ஒன்றாகும்.

கட்டிப்பிடிக்கும் முறை #7

நடனம்!

நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போது மெதுவாக கட்டியணைப்பது. அவர் ரொமான்ஸ் செய்ய விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும்.

கட்டிப்பிடிக்கும் முறை #8

இறுக்கமாக!

உங்கள் காதலர் திடீரென இறுக்கமாக கட்டியணைப்பது, அவர் உங்களை விட்டு விலக மறுக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

கட்டிப்பிடிக்கும் முறை #9

தூக்குவது!

கட்டியணைத்து மெல்ல தூக்கி கொஞ்சுவது, உங்கள் துணை உறவில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

கட்டிப்பிடிக்கும் முறை #10

விலகு நின்று கட்டியணைப்பது!

சற்று விலகி நின்று கட்டியணைப்பது. அவர் ஓர் பேச்சுக்காக தான் கட்டிப்பிடிக்கிறார் என்று பொருள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயணிகளுடன் விபத்தை சந்திக்கவிருந்த படகு…. நொடிப்பொழுதில் தப்பித்த அதிர்ச்சி தருணம்…!! வீடியோ
Next post கல்லூரி பெண்ணின் அசத்தல் நடனம்… என்னம்மா பின்னி பெடலெடுக்குறாங்கப்பா? வீடியோ