நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமா? எப்படி கண்டுபிடிப்பது…!!
உண்ணும் உணவில் கூட நம்பகத்தன்மை இழக்கும்படி சுய நல நோக்கோடு கலப்படம் செய்கிறார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இதனை உபயோகிக்காமல் எப்படி தடுக்கலாம்? நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமானதா என எப்படி கண்டுபிடிக்கலாம்? இதைப் படிங்க.
பெருங்காயம்:
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.
தேயிலைத் தூள்:
தேயிலைத்தூளில், பயன்படுத்திய தூளை உலர்த்தி, பின் அதில் செயற்கை வண்ண மூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை ஃபில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.
உப்பு:
சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைக்கும்போது நீர் வெள்ளை நிறமாக இருந்தால் அதில் சுண்ணாம்பு கலக்கிறார்கள் என்று அர்த்தம். சுத்தமான உப்பு நீரில் நிறமற்று காணப்படும்.
சர்க்கரை:
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.
ஏலக்காய்:
ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.
மஞ்சள்:
மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் நிறமாகி விடும். இது உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய ரசாயனம் ஆகும்.
மிளகாய்ப் பொடி:
மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். பாத்திரத்தின் அடியில் செங்கல் பொடி மிளகாய்ப் பொடியை விட வேகமாக சென்று தங்கி விடும்.
கொத்துமல்லி பொடி:
கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்.
சீரகம்:
சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் கொடுக்கப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.
நெய்:
நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். ஹைட்ரோ குளோரிக் அமிலம் சிறிது எடுத்து அதில் அதே அளவு நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.
வெல்லம்:
வெல்லத்தில் மெட்டானில் என்ற மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் நிறமாகி விடும்.
ரவை:
ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating