வங்காளதேசம்: தொழிற்சாலை தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி…!!

Read Time:2 Minute, 10 Second

201609101035451542_10-killed-20-injured-in-bangladesh-factory-fire_secvpfவங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து வந்தன.

காலை சுமார் 6.15 மணியளவில் இங்குள்ள ஒரு ராட்சத கொதிகலன் (பாய்லர்) திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, நான்கு மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் மளமளவென தீ பரவியது. உள்ளே இருந்த தொழிலாளர்கள் பீதியால் அலறியபடியே உயிர்பயத்துடன் வெளியே ஓடிவந்தனர்.

அவர்களில் பத்துபேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 20-க்கும் அதிகமானோர் டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் 20-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் படு கொலை…!!
Next post இரட்டை கோபுரம் தகர்ப்பு: நாளை 15-வது ஆண்டு தினம் – சிறப்பு அஞ்சலி கூட்டங்களுக்கு ஏற்பாடு…!!