பெண்ணை சவப்பெட்டியில் பூட்டி வைத்து 7 வருடம் பாலியல் பலாத்காரம்…!!

Read Time:3 Minute, 30 Second

201609100144042554_kidnapped-locked-in-coffin-and-raped-for-7-years-woman_secvpfஅமெரிக்கவைச் சேர்ந்த பெண் கொலீன் ஸ்டான் இவரது வாழ்க்கை அனுபவம் 2 புத்தகங்களாகவும் பல்வேறு டாக்குமெண்டிரிகளாகவும் வெளிவந்து உள்ளன. மீடியாக்களில் இவர் சவப்பெட்டி பெண் என அழைக்கப்படுகிறார். சவப்பெட்டியில் இவர் 7 வருடங்களாக ஒரு பாலியல் அடியாக அடைபட்டு கிடந்து உள்ளார்.

பின்னர் இவர் 1984 ஆமாண்டு அதில் இருந்து தப்பி உள்ளார். தற்போது இவரது கதை சினிமா படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த படம் இந்த வாரம் வெளியாகிறது.படத்தின் பெயர் சவப்பெட்டி பெண்.

தனது சோதனையான அனுபவம் குறித்து பீப்பிள்’ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கொலீன் கூறி இருப்பதாவது:-

1977 ஆம் ஆண்டும் காரில் பயணம் செய்து கொண்டு இருந்த கேமரூன் மற்றும் அவரது மனைவி ஜானீஸ் கூக்கர் ஆகியோரிடம் லிப்ட் கேட்டு ஏறினேன். எனக்கு நான் பாதுகாப்பாக இருப்பதாக முதலில் உணர்ந்தேன் ஏன் என்றால் அவர்களிடம் ஒரு குழந்தையும் இருந்தது.

ஆனால் பயணம் நீண்டது. பயணத்தின் முடிவில் கேமரூன் கத்தி முனையில் என்னை மிரட்டினார். பின்னர் எனது கைகால்களை கட்டி ஒரு பெட்டியில் அடைத்தார் நான் நினைத்தேன் நான் சாகபோகிறேன் என்று.

கேமரூன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யவும் கொடுமை படுத்தவும் மட்டுமே என்னை பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். ஒரு நாள் 23 மணி நேரம் பெட்டியிலேயே அடைத்து வைக்கப்பட்டேன்.அவர் என்னை கட்டாயபடுத்தி பாலியல் அடிமையாக இருக்க கையெழுத்து வாங்கி கொண்டார்.

எனக்கு முன்னால் அவரது மனைவியை அவர் பாலியல் அடிமையாக நடத்தி வந்து உள்ளார்.பின்னர் அவர்கள் இருவரும் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை கொண்டு வர எண்ணி உள்ளனர்.அதில் நான் சிக்கி கொண்டேன்.

பின்னர் 1984 ஆம் ஆண்டும் கேமரூன் மனைவி ஜானீஸ் உதவியுடன் அதில் இருந்து தப்பினேன். கேமரூனுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் சாட்சியும் அளித்தார்.என கூறி உள்ளார்.

கேமரூனின் இந்த குற்றத்திற்காக அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்டு உள்ளது. தற்போது சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி: 2 பேர் கைது…!!
Next post பணம் திருடியதாக கூறி 8–ம் வகுப்பு மாணவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்…!!