நாமக்கல் அருகே தேர்வு எழுத அனுமதிக்காததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி…!!

Read Time:2 Minute, 7 Second

201609091526473304_10th-class-student-suicide-attempt-near-namakkal_secvpfநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளூக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அருண் (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று இவர் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு கணக்கு பாட ஆசிரியர் சிவக்குமார் என்பவர் தேர்வு எழுத மாணவனை அனுமதிக்கவில்லை. இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அருண் பெற்றோரிடம் தன்னை ஆசிரியர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று கூறி அழுதார். இதையடுத்து மாணவனை பெற்றோர்கள் சமாதானம் செய்தனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் இரவில் வீட்டில் உள்ள பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை கண்ட பெற்றோர்கள் உடனடியாக அருணை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பேளூக் குறிச்சி போலீஸ் நிலையத்தில் பள்ளி ஆசிரியர் மீது புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவண்ணாரப்பேட்டையில் மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து…!!
Next post சிதம்பரத்தில் பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!