ஆரோக்கிய வாழ்வுக்கான வழிமுறைகள்…!!
உலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுறுத்தும் வகையில் வருடந்தோறும் ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார தினம் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார மையம் (World Health Organaisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை, உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கம்
உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதனையே இந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் முக்கிய செயல்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற கொடிய நோய்களுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.
1995ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் சுகாதாரத்தை அதிகம் பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகளை தெரிவு செய்து, அதை அந்த ஆண்டிற்குள் கூடுமானவரையில் முற்றிலும் ஒழிக்க உலக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆரோக்கிய வாழ்வு
உலக சுகாதார தினமான இன்று ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு சத்துள்ள உணவு அவசியம், ஆனால், இன்று பசுமைப் புரட்சி என்ற பெயரால் விளைச்சலை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும், உணவுப் பொருட்களும் விஷமாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்கி வருகின்றன.
காய்கறிகளின் தரம் குறைந்துவருவதால் அதனை உண்ணும் மனிதர்களின் வாழ்நாளும் குறைந்து வருகிறது.
அந்த காலங்களில் தானியங்களை அதிகமாக பயன்படுத்தி வந்ததால், ஆரோக்கியமான வாழ்வும், அதிகமான ஆயுளும் மனிதனுக்கு கிடைத்தது.
ஆனால், தற்போது பாஸ்ட்புட், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்துவிட்டோம்.
இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெடாமல் இருக்க அதிக அளவு உப்பு, வேதிப் பொருட் களை சேர்க்கின்றனர்.
இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் இரைப்பை புற்று நோய், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
பர்கர், பிரைடு ரைஸ், புரோட்டோ உள்ளிட்ட பாஸ்ட் புட் உணவுகளை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இதனை சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள் ஏற்படும்.
உங்கள் உடலை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அன்றாடம் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டாலே போதும்.
காரட்
வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் இவற்றில் உள்ளன.
குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
கண் பார்வைக்கு உகந்தது, காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.
மலச்சிக்கலை தீர்க்கும்.
உலர் பழங்கள்
உலர் பழங்களான முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை போன்றவைகளில் கார்போஹைட்ரேட் இருப்பதால், இதனை காலையில் எடுத்துக் கொண்டால், நாள் முழுவதும் எனர்ஜி இருக்கும்.
குறிப்பாக இது உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.
பப்பாளி
உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பழங்களில் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி, சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், காலையில் பப்பாளியை சாப்பிடுவது நல்லது.
ஆனால் இதை உடல் வெப்பம் அதிகம் இருப்போர் உட்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், இது சூட்டைக் கிளப்பிவிடும். மேலும் கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது.
காலிஃபிளவர்
காலிஃபிளவரில் பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ உள்ளன.
புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
மலச்சிக்கலை போக்கி உடலை இளைக்கச் செய்யும்.
ஆப்பிள்
ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால், அல்சைமர் என்னும் நினைவாற்றலிழப்பு நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்கலாம்.
மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating