9 கிலோ நகையுடன் ஓட்டம்: நகை கடை ஊழியரின் நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை…!!

Read Time:2 Minute, 15 Second

201609061441119767_9kg-gold-robbery-case-Jewelry-Shop-employee-friends-5-people_SECVPFஅயனாவரம் சோம சுந்தரம் 6-வது தெருவில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தவர் தீபக்.

கடந்த 3-ந்தேதி அவர் கடையில் இருந்த 9 கிலோ தங்க நகை, ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டார். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து எடுத்து சென்றார்.

இதுகுறித்து அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபக்கின் சொந்த ஊர் ராஜஸ்தான் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

இதே போல் தீபக்கின் உறவினர் வீடு பெங்களூரில் உள்ளது. அங்கு அவர் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பெங்களூருக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.

தீபக் நகையை கொள்ளையடித்து சென்ற போது நண்பர் ஒருவர் சென்றதையும் அருகில் உள்ள கடைக்காரர்கள் பார்த்து உள்ளனர். எனவே தீபக்கின் நண்பருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக தீபக்கின் நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர்கள்.

நகை கொள்ளை திட்டம் பற்றி அவர்களிடம் தீபக் ஏற்கனவே கூறி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கு வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர்…!!
Next post சுரங்கப்பாதையில் செயினை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்…!!