மெக்சிகோ நாட்டை பயங்கர புயல் தாக்கும் அபாயம்: முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்…!!

Read Time:2 Minute, 20 Second

201609061108556486_Tropical-Storm-Newton-threatens-Mexico_SECVPFஅமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டின் அருகே பசிபிக் கடலில் பயங்கர புயல் சின்னம் உருவாகி உள்ளது.

இந்த புயல் கலிபோர்னியா வளைகுடாவில் தற்போது மையம் கொண்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் இதன் மையம் இருக்கிறது. எந்த நேரத்திலும் இது கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது 150 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறை காற்று வீசும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மெக்சிகோ நாட்டில் உள்ள குவாரா மாகாணம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கூறி உள்ளனர். இதனால் அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே புயல் சின்னத்தால் அங்கு கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சில இடங்களில் சாலைக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பஜா என்ற இடத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கி கொண்ட 200 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

இந்த புயலால் பக்கத்து நாடான அமெரிக்காவும் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் நிலநடுக்கம்: பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் காயம்…!!
Next post ராஜாக்கமங்கலம் அருகே கடல் அலையில் சிக்கி 4 குழந்தைகளின் தாய் பலி…!!