இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

Read Time:2 Minute, 12 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் சுமார் எட்டு லட்சம் பேர் தமக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு இடையிலான பாலுறவு அதிகரித்துள்ள காரணத்தினால் எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவி வருவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அண்மை காலமாக எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு பதிவாகியுள்ளது.

பாதுகாப்பற்ற பாலுறவு மற்றும் மரபு நெறிகளை மீறிய பாலியல் தொடர்பு போன்ற காரணிகளினால் இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கபடுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகனங்களில் சிக்னல் போடாமல் பயணிப்பவரா நீங்கள்?.. அப்போ இது உங்களுக்குத்தான்…!! வீடியோ
Next post கறுப்புப் பணத்தை முதலீடு செய்யும் இடமாக கொழும்பு…!!