ஷீரடியில் இருந்து வந்த பஸ் மீது ராட்சத மரம் விழுந்தது: 26 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!

Read Time:2 Minute, 2 Second

201609032152174206_26-escape-unhurt-as-huge-tree-falls-on-bus-in-Bengaluru_SECVPFமகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் இருந்து நேற்று புறப்பட்ட வால்வோ பேருந்து இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தது. பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை வந்தடைய 3 கி.மீ. தொலைவு இருக்கும் நிலையில், பேருந்து மீது சுமார் 60 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய மரம் ஒன்று பலத்த சத்தத்துடன் விழுந்தது. இதனால் பயணிகள் பயந்து கூச்சலிட்டனர்.

ஆனால், மரத்தின் கிளைகள் பேருந்திற்கு வெளிப்புறம் உள்ள சாலையில் தரைதட்டியதால் பேருந்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மேற்கூரை மற்றும் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. கடுமையாக சேதம் அடைந்தது. பேருந்தில் பயணம் செய்த 26 பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து வேகமாக வந்திருந்தால் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டிருக்கும்.

பேருந்து மீது விழுந்த மரம் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக, பேருந்து சிறிது நேரம் தாமதமாக மெஜஸ்டிக் வந்து சேர்ந்தது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?
Next post ரங்கலயில் 56 வயதானவரைக் காணவில்லை…!!