சோம்பேறித்தனமாகும் குழந்தைகளை தடுக்கும் வழிகள்… முயற்சி செய்யுங்களேன்…!!
இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கிறார்கள், அதே சமயம் மிகவும் சோம்பேறியாகவும் இருக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தான். ஏனெனில் இன்றைய குழந்தைகளுக்கு வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதை விட, ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு வீடியோ கேம்ஸ் விளையாடுவது பிடிப்பதால், அவர்கள் வேலை எதாவது செய்ய வேண்டுமெனில் கஷ்டப்படுகின்றனர்.
மேலும் ஆய்வு ஒன்றிலும், இன்றைய காலத்தில் குழந்தைகள் சோம்பேறித்தனமாக இருப்பதற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தான் காரணம் என்று சொல்கிறது.
இதனால் குழந்தைகள் சிறு வயதிலேயே பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். மேலும் படிக்க வேண்டும் என்றாலே பல குழந்தைகள் வெறுப்படைகின்றனர்.
குழந்தைகள் சோம்பேறித்தனமாக இல்லாமல் இருக்க:
1. சோம்பேறியாக இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகளில் முதன்மையானது, குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதோடு, அவர்களிடம் பேச வேண்டும். மேலும், இத்தகைய குழந்தைகளைக் கையாளும் போது பெற்றோர்கள் எப்போதுமே மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
ஏனெனில், நீங்கள் சொன்னதும் அவர்கள் உடனே மாற்றிக் கொள்ள முடியாது. அதற்கு சில நாட்கள் ஆகும். குழந்தைகளிடம் பேசும் போது, சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவசியம் சொல்ல வேண்டும்.
2. குழந்தைகள் சோம்பேறிதனமாக இருக்கும் போது, அவர்களிடம் சிறுசிறு வேலைகளைச் சொல்லி அவர்களை செய்ய வைக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால், வேலை செய்தால் நீ கேட்பதை வாங்கித் தருவேன் என்று சொல்லியாவது வேலையைச் செய்ய வைக்க வேண்டாம்.
3. சோம்பேறியாக இருக்கும் குழந்தையை கையாளும் போது, சற்று அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இத்தகைய குழந்தைகள் எப்போதும் சோம்பேறித்தனமாக இருப்பதால், அவர்கள் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வதுடன், சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
4. உங்கள் குழந்தைகக்கு ஏதேனும் விளையாட்டின் மீது விருப்பம் இருந்தால், சற்றும் யோசிக்காமல் அதில் அவர்களை ஈடுபடச் செய்யுங்கள். இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதுடன், மற்ற குழந்தைகளிடம் நட்புறவு கொண்டு, மற்றவர்களைப் பார்த்து எப்படி இருக்க வேண்டுமென்று கற்றுக் கொள்வார்கள்.
5. சோம்பேறியாக இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களாக இருப்பது சாதாரணம் அல்ல. அப்போது நிறைய பொறுமைத் தேவைப்படும். ஏனெனில், நீங்கள் ஏதேனும் சொல்ல அவர்கள் அதை செய்யாமல் இருந்தால், உங்களுக்கு கோபம் வந்து அவர்களை திட்டுவீர்கள்.
அப்படி செய்தால், அவர்கள் கோபமடைவதுடன் உங்களையும் எரிச்சலடைய செய்வார்கள். எனவே அவர்களிடம் பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating