திருமணம் செய்து கொள்ளாமல் ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா…!!

Read Time:4 Minute, 4 Second

Couple1திருமண‌ம் எ‌ன்பது ஒரு ஆணையு‌ம், பெ‌‌ண்ணையு‌ம் ம‌ட்டு‌ம் இ‌ல்லற‌த்‌தி‌ற்கு‌ள் இணை‌ப்பது அ‌ல்ல. அவ‌ர்க‌ள் மூலமாக அவ‌‌ர்களது குடு‌ம்ப‌ங்களு‌ம் உறவுகளாக மாறு‌வத‌ற்கான ஒரு அடி‌ப்படை பாலமாகு‌ம்.

பல உலக நாடுக‌ள் இ‌ந்‌தியாவை‌ப் பா‌ர்‌த்து ‌பிர‌ம்‌மி‌க்கு‌ம் ஒரு ‌விஷய‌ம் எ‌ன்றா‌ல் அது ஒரு‌த்தனு‌க்கு ஒரு‌த்‌தி எ‌ன்ற கலா‌ச்சார‌த்தை‌‌த்தா‌ன்.
பல வெ‌ளிநா‌ட‌்டு ம‌க்க‌ள் இ‌ந்‌தியாவை‌ப் போல ஒருவனு‌க்கு ஒரு‌த்‌தி என கால‌ம் முழு‌க்க வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌‌ர். ஆனா‌ல் நாமோ, நமது கலா‌ச்சார‌த்‌தி‌ன் அடி‌ப்படையை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்ளாம‌ல், வெ‌ளிநா‌ட்டு ம‌க்களை‌ப் போல ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளாம‌ல் ஒ‌‌ன்றாக வாழு‌ம் முறையை த‌த்தெடு‌த்து‌க் கொ‌ள்ள ‌நினை‌க்‌கிறோ‌ம்.

எ‌ந்த ‌ந‌ல்ல ‌விஷய‌த்தையு‌ம் நா‌ம் ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து‌க் க‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம். ஆனா‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ள் உலக நா‌ட்டு ம‌க்க‌ளிட‌ம் இரு‌ந்து தவறான ‌விஷய‌ங்களை ம‌ட்டுமே க‌ற்று‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இ‌ந்‌தியா‌வி‌ல் பல ந‌ல்ல ‌விஷய‌ங்க‌ள் இரு‌ப்பதாலோ எ‌ன்னவோ, ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் இரு‌க்கு‌ம் ‌தீயவை ம‌ட்டுமே இவ‌ர்களது க‌ண்ணு‌க்கு‌ப்படு‌‌கிறது.

‌‌திருமண‌ம் இ‌ன்‌றி கணவ‌ன் மனை‌வி `போல’ வா‌ழ்வது அவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் எ‌ந்த ‌பிர‌ச்‌சனை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் அவ‌‌ர்களது குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம், அவ‌ர்களு‌க்கு‌ப் ‌பிறகு வரு‌ம் சமுதாய‌த்‌தி‌ற்கு‌ம் இது ஒரு பெ‌ரிய கே‌ள்‌வி‌க்கு‌றியா‌கி‌விடு‌ம் எ‌ன்பதை ‌நினைவு கூற வே‌ண்டு‌ம்.

ஒரு‌த்தனு‌க்கு ஒரு‌த்‌தியாக வாழு‌ம் நமது தா‌ம்ப‌த்‌திய உறவுக‌ளி‌ல் எ‌த்தனையோ ‌வி‌ட்டு‌க் கொடு‌த்த‌ல்களு‌ம், பு‌ரி‌ந்துண‌ர்வுகளு‌ம், எழுத‌ப்படாத ஒ‌ப்ப‌ந்த‌ங்களு‌ம், ச‌கி‌ப்பு‌த் த‌ன்மையு‌ம் வேரூ‌ன்‌றி உ‌ள்ளது. இதனா‌ல்தா‌ன் எ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ள் வ‌ந்தாலு‌ம் கணவனோடு சே‌ர்‌ந்து வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்று ந‌ம் நா‌ட்டு‌ப் பெ‌ண்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.

கணவ‌ன் மனை‌வி‌க்கு‌ள் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சனைகளை‌ ஆராய்ந்து அத‌ற்கு ஒரு சுமூகமான முடி‌வினை‌த் தரலா‌ம் எ‌ன்றுதா‌ன் நமது ‌திருமண ப‌ந்த‌ங்க‌ள் ‌நின‌ை‌‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல், இதுபோ‌ன்று ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளாம‌ல் வாழு‌ம் `த‌ம்ப‌திக‌ள்’ அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ஒரு ‌பிடி‌ப்‌பு இ‌ன்மையையே அவ‌ர்களது ‌நிலை‌ப்பாடு உண‌ர்‌த்து‌‌கிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள்களை இருட்டறைக்குள் வைத்துப் பூட்டிய குடிகார தந்தை: 3 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்ட அவலம்…!!
Next post நாகரீகம் என்ற பெயரில் பெற்றோர்களை ஏளனம் பேசலாமா? வீடியோ