137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்…!!

Read Time:2 Minute, 52 Second

DSC02577பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர் ,

தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையில் 137 வர்த்தகர்கள் அசுத்தமாக பொது மக்களுக்கு உணவு வகைகளை விற்பனை செய்தமை, தமது வியாபார நிறுவனத்தை சுத்தமாக வைத்திருக்காமை, பழைய உணவுகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது டிஜிட்டல் வர்ண குறியீடு இல்லாத குளிர்பான போத்தல்கள் ஒரு தொகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளன. . எதிர்வரும் காலங்களில் உணவு பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். எனவே வியாபாரிகள் சுத்தமாக உணவு வகைகளை பொது மக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.

தேசிய பாதுகாப்பு வாரம் இம்மாதம் 28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரம் முறிந்து வீதியில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு…!!
Next post நாம் தினமும் பார்க்கும் கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!