விற்பனைக்கு தயாராகும் பிளாஸ்டிக் அரிசி.. உண்மையிலேயே அது பிளாஸ்டிக் அரிசி தானா? வீடியோ

Read Time:2 Minute, 31 Second

plastic_rice_002.w540பிளாஸ்டிக் அரிசி என்றதுமே, அது பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டது என்று நினைக்க வேண்டாம். வயலில் விளையும் நெல்லை, இயந்திரத்தில் அரைத்து அரிசியாக்குவது வழக்கமான முறை. அப்படி அரிசியாக்கும் போது உடையும் அரிசியை, குருணை என்பார்கள்.

இந்தக் குருணையை அரைத்து மாவாக்கி, அச்சில் வைத்து மீண்டும் முழு அரிசியாக்குவது ஒரு வகை. இன்னொரு வகை… மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கை அரைத்து, அவற்றுடன் சில வேதிப் பொருட்களைக் கலந்து உருவாக்கப்படுவது.

இதில், ஒருவித பிசினும் கலப்பதாகக் கூறப்படுகிறது. இவை, பெரும்பாலும் சீனாவில் தயாராகிறது. மாத்திரை தயாரிப்பது போல வைட்டமின்களைச் சேர்த்து அரிசி தயாரிக்கும் முறையும் இருக்கிறது. இந்த மூன்று வகை அரிசிகளுமே பிளாஸ்டிக் தன்மைகொண்டவைதான். இந்த வகை அரிசிகள், பெரும்பாலும் தனியே விற்பது இல்லை. வழக்கமான அரிசியுடன் கலந்து, கலப்பட முறையில் விற்கப்படுகிறது.

சாதாரணமாகப் பார்த்துக் கண்டுபிடிப்பது கடினம். இவற்றை வேகவைக்கும்போது, வழக்கமான அரிசிகள் போல இல்லாமல் விரைப்பாக இருக்கும். இதைச் சாப்பிட்டால், எளிதில் ஜீரணமாகாது. உடல் நலத்துக்கு பல்வேறு கெடுதல்களை உண்டாக்கும்.

அரிசி வாங்கும் போது கவனமா வாங்குங்க அது பிளாஸ்டிக் அரிசியா கூட இருக்கலாம் …உஷார் மக்களே! அரிசியிலும் கலப்படம்பண்ணா எதைத்தான் சாப்பிடறது…

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?
Next post மருதா‌ணி‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்…!!