விவசாயி படுகொலை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டினோம்- கைதான வாலிபர் வாக்குமூலம்..!!
திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூரை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 37), விவசாயி. இவரது மனைவி வனிதா (28). இவர்களுக்கு யமுனா, லோகேஷ் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தேவநாதன் திண்டிவனம் கல்லூரி மேல்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கம்பெனி அருகே படுகொலை செய்யப்பட்டு ரோட்டில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ரோசனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகர் முனிசிபல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் (30) என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
தேவநாதனின் குழந்தைகள் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் என்குழந்தைகளும் படித்து வருகிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அழைத்து வரும்போது, எனக்கும் தேவநாதன் மனைவி வனிதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கி பழகிவந்தோம் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். எங்களது கள்ளக்காதல் தேவநாதனுக்கு தெரியவந்தது அவர் வனிதாவை கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து வனிதா என்னுடன் பழகிவந்தார். அவரை அவரது கணவர் தொடர்ந்து கண்டித்து வந்தார். இதனால் வனிதா என்னிடம் என் கணவர் இருக்கும்வரை நம்மை நிம்மதியாக வாழவிடமாட்டார் என்று கூறினார். இதனால் தேவநாதனை தீர்த்துகட்ட முடிவு செய்தோம்.
சுதந்திரதின விடுமுறை நாளில் தேவநாதன் குடும்பத்தினரும், என்குடும்பத்தினரும் சுற்றுலாவாக புதுவை சென்றோம். கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பல இடங்களை சுற்றிபார்த்தோம். கபாலி படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். திண்டிவனம் வந்தவுடன் தேவநாதன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை ஒலக்கூருக்கு செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் திண்டிவனம் கல்லூரி சாலையில் உள்ள காலிமனைக்கு சென்று மதுகுடித்தார். இதை அறிந்த நான் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தேவநாதனை தீர்த்து கட்ட இதுதான் சரியானநேரம் என்று முடிவு செய்தேன். எனது நண்பர் தேசிங்கனை என்னுடன் அந்த பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்கு தேவநாதன் குடிபோதையில் அமர்ந்திருந்தார்.
அப்போது இரும்பு கம்பியால் அவரை தாக்கினோம். பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். சாலை விபத்தில் அவர் இறந்துவிட்டதாக காட்ட முயற்சி செய்தோம். எனவே தேவநாதன் உடலை 50 அடி தூரத்துக்கு இழுத்து சென்று திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போட்டோம். மேலும் அவரது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியை இரும்பு கம்பியால் உடைத்தோம். தேவநாதன் உடல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஓடிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பர் தேசிங்கன் மற்றும் தேவநாதனின் மனைவி வனிதா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating