கோவையில் ஆசிரியர்கள் அடித்ததால் மாணவர் தற்கொலை…!!
கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜன். கூலித் தொழிலாளி. இவரது மகன் பாபு (வயது 14). இவர் கோவை வெங்கிட்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு பாபு படிக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் இருந்து வெளியே செல்லும் போது பாபுவை வகுப்பை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு சென்றுள்ளார்.
அப்போது பாபு வகுப்பில் விளையாடிய 3 மாணவர்களின் பெயர்களை போர்டில் எழுதி உள்ளார். ஆசிரியர் வந்ததும் வகுப்பில் விளையாடிய மாணவர்களை ஆசிரியர் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 மாணவர்களும் ஆசிரியரை சந்தித்து உங்களையும், நம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையும் இணைத்து பாபு பேசுவதாக புகார் கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆசிரியர் பாபுவை தனியாக அழைத்து தாக்கியதாக தெரிகிறது. மேலும் அந்த ஆசிரியர் பள்ளியில் மற்ற 2 ஆசிரியர்களிடம் பாபுவை பற்றி கூறியதாக தெரிகிறது. அந்த 2 ஆசிரியர்களும் பாபுவை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் பாபு கடந்த 1 மாதங்களாக மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார். வீட்டில் இருந்த பாபு நேற்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்றார்.
அதிகாலையில் திடீரென பாபு படுக்கையில் இருந்து மாயமாகி விட்டார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வீடு முழுவதும் தேடினர். அப்போது பாபு சமையல் அறையில் சாணிப்பவுடரை கரைத்து குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பாபுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மாணவன் பாபுவின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு அவனது தாய் பிரேமா, அண்ணன் மணிகண்டன் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண் டனர்.
பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாணவனின் தாய் பிரேமா கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகனை ஆசிரியர்கள் அடித்தது குறித்து கேள்விப்பட்டதும் , பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட் டோம். ஆனால் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை கண்டிக்கவில்லை.
மேலும் ஆசிரியர்கள் 3 பேரும் எனது மகனை அவதூறாக பேசி தொடர்ந்து தாக்கியுள்ளனர்.
எனவே எனது மகனை தாக்கிய 3 ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எனது மகனின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating