என்ஜின் கோளாறு காரணமாக மாயமான மலேசிய விமானம் அதிவேகமாக கடலில் விழுந்தது: ஆஸ்திரேலிய வல்லுனர்கள் கண்டுபிடிப்பு..!!

Read Time:2 Minute, 9 Second

201608100221233180_Flight-MH370-Missing-Plane-Fell-At-20000-Feet-A-Minute_SECVPFமலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விமானம், நடுவானில் மாயமானது.

அந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 135 மில்லியன் டாலர் (சுமார் ரூ.905 கோடி) செலவில் தேடும் பணி நடந்தும், அந்த விமானத்தைப்பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த விமானத்தில் இருந்து பெறப்பட்ட சிக்னல்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த வல்லுனர்கள் ஆராய்ந்தார்கள். அதில் அந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, அது நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி என்ற வேகத்தில் தொடங்கி அதிவேகமாக கடலில் விழுந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

அந்த விமானம் கடைசி நேரத்தில் செயற்கைக்கோள்களுடன் தானியங்கி கைகுலுக்கல் சிக்னல்களை பல முறை செய்திருக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த சிக்னல்களில் இருந்து, அந்த விமானம் தற்போது தேடல் பணி நடந்து வருகிற 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில்தான் விழுந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் தலைமை கமிஷனர் கிரேக் ஹ¨ட் கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்தில் தாலி நுழைந்த கதை தெரியுமா?.. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது..!!
Next post தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…