புதன், வியாழக்கிழமைகளில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள்..!!

Read Time:2 Minute, 33 Second

201608091541447894_Coming-towards-the-Earth-Asteroids_SECVPFபூமிக்கு மேலே விண்ணில் பல கோடி விண்கற்கள் சுற்றியபடி உள்ளன. இவை அவ்வப்போது பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து விடுகின்றன. அப்போது புவிஈர்ப்பு விசையால் விண்கற்கள் பூமியை நோக்கி வருகின்றன.

இந்த கற்கள் விண்ணில் வரும்போதே தீப்பற்றி எரிந்து பூமியை அடைவதற்குள் சாம்பலாகி விடுகிறது. இதன் காரணமாக பூமிக்கு பெரிய அளவில் ஆபத்து ஏற்படுவதில்லை.

ஒவ்வொரு மணி நேரத்திலும், 200 விண்கற்கள் இவ்வாறு பூமியை நோக்கி வந்தபடி உள்ளன. இரவு நேரத்தில் திடீரென பூமிக்கு மேலே ஏதோ ஒரு பொருள் அதிக வெளிச்சத்துடன் பாய்ந்து செல்வதை நாம் அடிக்கடி பார்க்கலாம். விண்கற்கள் இப்படி பூமிக்கு வந்து எரிவதால் தான் நமக்கு அதுபோன்ற காட்சியை தரும்.

பொதுவாக ஆகஸ்டு மாதங்களில் வழக்கத்தை விட அதிகமான விண்கற்கள் பூமியை நோக்கி வருவது உண்டு. வருகிற புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்கள் வழக்கத்தை விட 2 மடங்கு அதிக விண்கற்கள் பூமியை நோக்கி வர இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது மணிக்கு 400 விண்கற்கள் பூமியை நோக்கி வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே இரவு நேரங்களில் அதிக விண்கற்கள் விண்ணில் எரிந்தபடி வருவதை பார்க்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறினார்கள்.

**** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் நீர்வெட்டு…!!
Next post ஈக்வேடரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி…!!