6 வயது மகளை வயதானவருக்கு திருமணம் செய்துவைத்த தந்தைக்கு அடி…!! வீடியோ

Read Time:2 Minute, 46 Second

201608071009381601_6-years-old-girl-cries-after-being-married-in-exchange-for-a_SECVPFஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் உழைத்து, சம்பாதித்து தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால், தனது 6 வயது மகளான ஹாரிபவுல் என்பவரை அப்பகுதியில் வசித்து வரும் சையத் அப்துல் கரீம் (55) என்பவருக்கு வர்த்தக ரீதியாக ‘பண்டமாற்று’ முறையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், ஆடு போன்றவற்றை அந்நபரிடம் இருந்து வாங்கியுள்ளார்.

சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த திருமணம் குறித்து அருகில் வசிப்பவர்கள் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அந்த 55 வயது மணமகனையும், சிறுமியின் தந்தையையும் உள்ளூர் பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த தந்தையையும், வயதான நபரையும் கைது செய்துள்ளனர்.

ஆனால், அந்த வயதான நபரோ.., சிறுமியை காட்டி, இவள் என்னுடைய மனைவி, தற்போது இவளுடன் நான் எவ்வித உறவும் கொள்ளவில்லை அவளுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் நான் உறவு கொள்வேன், அதுவரை நான் இவளை பத்திரமாக பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த போலீசார், அவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது அச்சிறுமி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டது தொடர்பான செய்தி வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி…!!
Next post பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?