திருவனந்தபுரம் அருகே நண்பரின் மகளை கடத்தி கற்பழித்து கொன்ற தொழில் அதிபர்…!!
திருவனந்தபுரத்தை அடுத்த ஆரன்முளா பகுதியைச் சேர்ந்தவர் விசுவாம் பரன். இவரது மகள் அசுவதி (வயது 20).
இவர்களின் வீடு அருகே வசித்து வந்தவர் காதர் யூசுப் (42). தொழில் அதிபர். இவரது மனைவி அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் காதர் யூசுப் மட்டும் ஊரில் தனியாக இருந்தார்.
விசுவாம்பரன், காதர் யூசுப் ஆகிய இருவரின் வீடுகளும் அருகருகே இருந்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். விசுவாம்பரன் வீட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் காதர் யூசுப் முக்கிய நபராக இருந்து விழாக்களை நடத்துவார்.
விசுவாம்பரனின் மகள் அசுவதியும் காதர் யூசுப்புடன் நெருங்கி பழகினார். அவரது வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்தார். நண்பர் என்று விசுவாம்பரனும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அசுவதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவர், எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. பதறிப்போன விசுவாம்பரன் இதுபற்றி காதர் யூசுப்பிடம் கூறினார்.
அவர், விசுவாம்பரனுக்கு ஆறுதல் கூறி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார். அங்கு அசுவதியை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் இருவரும் சேர்ந்து புகார் கொடுத்தனர். ஆரன்முளா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அசுவதியை தேடி வந்தனர்.
2 வாரங்களுக்கு முன்பு ஆரன்முளா புறநகர் பகுதியில் ஒரு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் ஒன்று கிடந்தது. பார்சல் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர்.
இதில் இறந்து கிடந்த பெண் கர்ப்பமாக இருந்ததும், யாரோ அவரை கழுத்தை நெரித்து கொன்றிருப்பதும் தெரிய வந்தது. பிணத்தின் முகம் முழுவதுமாக சிதைந்து இருந்ததால் அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.
ஆரன்முளா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிணம் கிடந்த இடத்தில் விசாரணை நடத்தினார். அப்போது பிணத்தை பொதிந்து இருந்த பார்சல் பேப்பரில் கொரியர் நிறுவனம் ஒன்றின் விலாசம் இருந்தது. உடனே அந்த பார்சல் பேப்பரை பத்திரமாக எடுத்து சென்று சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தினரிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த பேப்பர் சுற்றப்பட்ட பார்சல் ஆரன்முளாவில் உள்ள காதர் யூசுப் வீட்டிற்கு வந்தது என தெரிய வந்தது. உடனே போலீசார் காதர் யூசுப்பை பிடித்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில், அசுவதியை கடத்தி கற்பழித்து கொலை செய்தது காதர் யூசுப் என தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து காதர் யூசுப் போலீசாரிடம் கூறியதாவது:-
அசுவதி அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். எனது மனைவி வெளிநாட்டில் இருந்ததால் அசுவதியிடம் நான் அத்துமீறி நடப்பேன். இதை அவர் கண்டு கொள்ளவில்லை. எனவே இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இதில் அசுவதி கர்ப்பமானார்.
இதை என்னிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே அசுவதியை வீட்டில் இருந்து வெளியேற சொன்னேன். அவரை கொல்லத்துக்கு அழைத்து சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தேன்.
அவரது கர்ப்பத்தையும் கலைக்க சொன்னேன். அசுவதி மறுத்து விட்டார். மேலும் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஒருநாள் இரவு என்வீட்டிற்கு வந்து விட்டார். அவரை ஒரு மாதம் வீட்டிலேயே அடைத்து வைத்தேன். பக்கத்து வீட்டில் வசித்த விசுவாம்பரனுக்கு தெரியாமலேயே அவரது மகள் என் வீட்டில் இருந்தார்.
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து என் மனைவி ஊருக்கு வரப்போவதாக தெரிவித்தார். அவர் வந்தால் குட்டு உடைந்து விடும் என்பதால் அசுவதியை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி அவரை கழுத்தை நெரித்து கொன்றேன்.
பிணத்தை கொரியர் நிறுவனம் கொண்டு வந்த பார்சல் பேப்பரில் பொதிந்து தோட்டத்தில் வீசினேன். அந்த கொரியர் பேப்பர் மூலம் நான் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating